627

204. உயர் நிலை இதணம் ஏறி கைபுடையூஉ - உயர்ந்த நிலையினையுடைய பரணிலேயேறிக் கையைக்கொட்டி,

205. அகல் மலை இறும்பில் துவன்றியயானை - அகன்றமலையிற் குறுங்காட்டிடத்தே நிறைந்தயானைகளினுடைய,

206. பகல் நிலை தளர்க்கும் கவண்உமிழ் கடு கல் - பகற்பொழுதே நிற்கின்ற நிலையைக்கெடுக்கும்1 கவண்காலுகின்ற கடிய கற்கள்,

207 - 10. [ இருவெதி ரீர்ங்கழை தத்திக்கல்லெனக் கருவிரலூகம் பார்ப்போ டிரிய,வுயிர்செகு மரபிற் கூற்றத் தன்ன, வரும்விசை தவிராது:]

உயிர் செகு மரபின் கூற்றத்தன்ன -உயிர்களைப் போக்கும் முறைமையாலே கூற்றத்தையொக்கும்; அவைதாம்,

கரு விரல் ஊகம் பார்ப்போடு கல்லெனஇரிய - கரிய விரலையுடைய குரங்குகள் பார்ப்போடேகல்லென்னுமோசைபடக் கெடும்படியாக,

இரு வெதிர் ஈர்ங்கழை தத்திவிசை தவிராது வரும் - பெரிய மூங்கிலினது பசிய கோலைக்கடந்துவருகின்ற விசை மாறாது வரும் ;

மரம் மறையா கழிமின் - அதற்குமரங்களிலே ஒதுங்கிநின்று போவீராக ;

குறவர் (203) ஏறிக் கைபுடையூஉத் (204)தளர்க்குங்கல் (206) கூற்றத்தன்ன (209) ; அவை இரியத்(208) தத்தி (207) விசைதவிராதுவரும் ; அதற்கு மரமறையாக்கழிமின் (210) என்க.

211 - 2. உரவு களிறு சுரக்கும் இடங்கர்ஒடுங்கி இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின் - வலியயானையை விழுங்கும் முதலைகள் தங்கப்பட்டு இராக்காலத்தையொத்த இருள்செறியும் 2 மிளைகளையும்,

213. குமிழி சுழலும் குண்டு கயம்முடுக்கர் - குமிழிகள் சுழன்று வரும் ஆழ்ந்தநீரறாதமடுக்களையுடைய முடுக்கரையுமுடைய,

முடுக்கர் - நீர்குத்தின இடங்கள்.முடுக்கரையுமுடைய யாறு (214)

214. அகழ் இழிந்தன்ன கான் யாறுநடவை - ஏறுதற்கும் இறங்குதற்கும் அரியவாகையினாலேஅகழிலே இழிந்தாற் போன்ற காட்டாற்று வழி,

215. வழூஉம் மருங்கு உடைய -காலோடுமிடங்களையுடைய ; அவ்விடத்திற்கு,


1 " கல்கால் கவணையென்றது கற்களைக்கான்றாற்போலஇடையறாமல் விடும்கவணென்றவாறு " (பதிற். 88: 18, உரை)

2 மிளை - காவற்காடு ; இஃதுஇளையெனவும் வழங்கும்.