215 - 8. [வழாஅ லோம்பிப், பரூஉக்கொடிவலந்த மதலை பற்றித், துருவி னன்ன புன்றலை மகாரோ,டொருவி ரொருவி ரோம்பினிர் கழிமின் :] துருவின் அன்ன 1 புன்றலை மகாரோடு- செம்மறி யாட்டினையொத்த புற்கென்ற தலையினையுடையபிள்ளைகளோடே, வலந்த பரூஉ கொடி மதலை பற்றி வழாஅல்ஓம்பி - மரங்களிற் சுற்றிக் கிடக்கின்ற பரியகொடியாகிய பெரிய பற்றுக்கோட்டைப் பிடித்துக்காலோடுதலைப் பரிகரித்து, ஒருவிர் ஒருவிர் ஓம்பினிர் கழிமின்- ஒருவிரை ஒருவிர் பாதுகாத்துப் போவீராக ; 219. அழுந்து பட்டு அலமரும் புழகு அமல்சாரல் - கிழங்கு தாழ வீழ்ந்து அசையும் மலையெருக்குநெருங்கின பக்கமலையில், 220 - 21.[ விழந்தோர் மாய்க்குங் குண்டுகயத்தருகா, வழும்பு கண் புதைத்த நுண்ணீர்ப் பாசி :] விழுந்தோர்மாய்க்கும் குண்டு கயத்து அருகா கண் புதைத்த நுண் நீர்பாசி வழும்பு - வீழ்ந்தோரை மறைக்கும் ஆழத்தையுடையகுளங்களுக்கு அருகாக இடம் மறைதற்குக் காரணமாகிய நுண்ணியநீர்மையையுடைய பாசியினது குற்றம், 2 " வழும்பறுக்ககில்லாவாந் தேரை - வழும்பில்சீர் " என்றார்பிறரும். 222. அடி நிலை தளர்க்கும் அருப்பமும்உடைய - அடி ஊன்றியிட்ட நிலையை ஓடப்பண்ணும் ;அதுவுமின்றி அவ்விடம் போதற்கு அருமையையுமுடைய ;அதற்குப் பரிகாரமாக, 223 - 4. முழுநெறி அணங்கிய நுண்கோல் வேரலோடு எருவை மெல் கோல் கொண்டனிர் கழிமின்- வழிமுழுவதும் பின்னிவளர்ந்த நுண்ணிய கோல்களையுடையசிறுமூங்கிலோடே வேழத்தினது மெல்லிய கோல்களையும்பற்றுக்கோடாகப் பிடித்துப் போவிர் ; இத்துணையும் ஆற்றினது தீமையினளவு(67) கூறினார். 225 - 8. [ உயர்நிலை மாக்கற் புகர்முகம்புதைய, மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணைத், தாரொடுபொலிந்த வினைநவில் யானைச், சூழியிற் பொலிந்த:] புகர் முகம் புதைய சூழியின் பொலிந்தஉயர் நிலை மா கல் வினை நவில் யானை - புகரையுடைய முகமறையும்படிமுகபடாத்தாற் பொலிவு பெற்ற உயர்ந்த நிலையினையுடையபெருமையையுடைய மலைபோலும் போர்த்தொழிலிலே பயின்றயானையினையும்,
1 ‘புன்புறம் - புற்கென்றபுறம் ' (பெரும்பாண்.376, ந.) ; 'புல்லென்சடை - புற்கென்ற சடை ' (புறநா.252 : 2. உரை) 2 நாலடி. 352.
|