மாரியின் 1 இகுதரு வில் 2உமிழ்கடு கணை - மழைபோலத் தாழ்ந்து விழும்வில்லுக்கான்ற கடிய அம்பினையுமுடைய, தாரொடு பொலிந்த மூத்த புரிசை(229) - தூசிப்படையோடே பொலிவுபெற்ற பழைய மதில், மதில், ஆகுபெயராய்த் திருப்பதியையுணர்த்திற்று.என்றது காரியுண்டிக் கடவுளுடைய படைமிகுதி கூறிற்று.அன்றிப் பகைப் புலத்தை அழித்தற்கும் அந்நிலத்தைக்காத்தற்கும் நன்னன்வைத்தபடையுமாம். 228 - 9. [ சுடர்ப்பூ விலஞ்சி,யோரியாற் றியவின் மூத்த புரிசை :] சுடர் பூ இலஞ்சியாறு ஓர் இயவின் மூத்த புரிசை - ஒளியையுடைய பூக்களையுடையமடுவினையுடைய யாற்றுக்கரையில் ஒருவழியினையுடையஊர், ' ஓராற்றியவு ' பாடமாயின் ஒருப்பட்டவழியென்க. இனி அம்பையுடைய தூசிப்படையோடுபொலிந்த யானையென்று யானைக்கு அடையாக்கி அவ்வியானையினுடைய பூக்களெழுதின முகபடாம் போலே உயர்நிலைமாக்கற் புகர்முகம் புதையப்பொலிந்த சுடர்ப் பூவையுடைய புரிசை யென்றுமாம் ; இன்னும் யானையின் மத்தகம் போலே பொலிந்த சுடர்ப்பூ இலஞ்சியையுடைய உயர்நிலைமாக்கல்லையுடையபுரிசையென்பாருமுளர். அவர் சுனையிடத்து மேலெழுந்தகுவளை முதலியவற்றின் அரும்புகள் தலைசாய்ந்து கற்புதையக்கிடந்ததற்கு யானையின் மத்தகத்துப்புகரைஉவமையென்று கொள்வர். 230. [ பராவரு மரபிற் கடவுட் காணின்:] புரிசை (229) பராவு அரு மரபின் கடவுள் காணின் -கோயிலிற் பராவுதற்கரிய முறைமையினையுடையகடவுளைக் கண்டீராயின், 231. [ தொழாநிர் கழியி னல்லது :] நீர்தொழா கழியின் அல்லது - நீர் வணங்கிப்போம் அத்தனையல்லது, நீரென்பது குறுகிநின்றது. இனித் தொழாநிரென்பது3 மறை யன்றித் தொழுதென்றுபொருடருமேனுமுணர்க. 231 - 2. வறிது நும் இயம் தொடுதல் ஓம்புமின்- சிறிது நும்முடைய வாச்சியங்களைத் தீண்டுதலைக்காப்பீராக ; அதற்குக் காரணமென்னையெனின்,
1 இகுத்தல் சொரிதல் ; " இகுத்தகண்ணீர் - சொரியப்பட்ட கண்ணீர் " (புறநா.143 : 13, உரை) 2 " உமிழ்தல் - புறப்படவிடுதல்" என்பர் தக்கயாகப்பரணி உரையாசிரியர் ; 110,602. 3 மறை - எதிர்மறை.
|