1 - திருமுருகாற்றுப்படை இடை இடுபு - நடுவேயிட்டு, வேலன் - படிமத்தான், 191. அம் பொதி புட்டில் - அழகினையுடைத்தாகிய பொதிதலையுடைய தக்கோலமென்னும் முதலின் காய், அது புட்டில் போறலிற் புட்டிலென்றார். விரைஇ - கலந்து, 1குளவியொடு - காட்டு மல்லிகையுடனே, 192. 2வெள் கூதாளம் தொடுத்த கண்ணியன் - வெண்டாளியையும்கட்டின கண்ணியையுடையனாய், 193. நறு சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் - நறிய சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினையுடைய வேலன் (190), வேலன் பைங்கொடியாலே (190) புட்டில்விரைஇ (191) நறைக்காய் இடையிடுபு (190) குளவியொடு (191) கூதாளத்தையுங் கட்டிய கண்ணியனாய் (192), கண்ணியன்: வினையெச்ச வினைக்குறிப்புமுற்று. 194. கொடு தொழில் வல் வில் கொலைஇய கானவர் - 3கொடிய தொழிலையுடைய வலியவில்லாற் கொல்லுதலைச்செய்த குறவர், ‘குலைஇய' என்ற பாடத்திற்குவில்லைவளைத்த கானவரென்க; எனவே கோறல் பெற்றாம். 195. 4நீடு அமை விளைந்த தேன் கள் தேறல் - நெடுகின மூங்கிலிலே யிருந்து முற்றின தேனாற்செய்த கட்டெளிவை,
196. குன்றகம் சிறுகுடி கிளையுடன் மகிழ்ந்து - மலையிடத்துச் சிறிது ஊரிலே இருக்கின்ற சுற்றத்தோடே உண்டு மகிழ்ந்து,
197. தொண்டகம் சிறு பறை குரவை அயர - அந்நிலத்துக்குரிய தொண்டகமாகிய சிறுபறையினது தாளத்திற்குக் குரவையாட,
கானவர் தேறலை மகிழ்ந்து குரவையாடவென்க.
198-9. [விரலுளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்காற், குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி:]
விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறு கான் கண்ணி - விரலது அலைப்பாலே5வலிய அலர்த்த பூவாகலின் வேறுபடுகின்ற நறியமணத்தினையுடைய தலையிற்சூடும் மாலையினையும்,
1. தாளிப்பூவோடு (வேறுரை) 2.வெள்ளைக் கூதாளப் பூவையும் (வேறுரை) 3. "கோட்டமை வல்விற் கொலைபிரியா வன்கண்ணர்"(ஐந். ஐம்.) 4. நெடிய மூங்கிலரிசியில் உண்டாகச் சமைத்திட்டுஇனிமைக்கு இடமாகிய மதுவை (வேறுரை) 5 "திறந்துமோந் தன்ன சிறந்துகமழ் நாற்றத்து"(மதுரைக். 567) என்பதும், அதனுரையும், "அகைமத்தம்"(தக்க. 98) என்பத
|