232 - 3. [ மயங்குதுளி, மாரி தலையுமவன்மல்லல் வெற்பே :] அவன் மல்லல் வெற்பு மயங்கு துளிமாரி தலையும் - அவனது வளவிய நவிரமென்னுமலை மயங்கினதுளியையுடைய மழையை இடைவிடாமற் பெய்யா நிற்கும் ; என்றதனாற்பயன் : வாச்சியங்களும்நனைந்து நுமக்கும் போதலரி தென்பதாம். 234 - 5. [ அலகை யன்ன வெள்வேர்ப்பீலிக், கலவ மஞ்ஞை கட்சியிற் றளரினும் :] 1 அலகை அன்ன வெள்வேர்பீலி மஞ்ஞை - பலகறையையொத்த வெள்ளிய 2வேரினையுடைய பீலியையுடைய மயில், கட்சியில் கலவம் தளரினும் - அக்காட்டிடத்தேஆடுதற்குவிரித்த கலாபத்தினது பாரத்தாலே ஆடியிளைத்துநிற்பினும், 236 - 7. [ கடும்பறைக் கோடியர் மகாஅரன்ன, நெடுங்கழைக் கொம்பர்க் கடுவ னுகளினும் :] நெடு கழை கொம்பர் - நெடிய மூங்கிலின்கவடுகளிலே, கடு பறை கோடியர் மகாஅர் அன்னகடுவன் உகளினும் - கடிய பறையினையுடைய கூத்தருடையபிள்ளைகளையொத்த கடுவன்பாயினும் , 238 - 9. [ நேர்கொ ணெடுவரை நேமியிற்றொடுத்த, சூர்புக லடுக்கத்துப் பிரசங் காணினும் :] 3 நேர் கொள் நெடு வரை சூர்புகல் அடுக்கத்து - செவ்வையைத் தன்னிடத்தே கொண்டநெடியமலையில் தெய்வம் விரும்பின பக்க மலையிலே, நேமியின் தொடுத்த பிரசம் காணினும்- தேருருள்போல்வைத்த தேனிறாலைக் காணினும், 240 - 41. [ ஞெரேரென நோக்கலோம்புமி னுரித்தன்று, நிரை செலன் மெல்லடி நெறிமாறுபடுகுவிர் :] ஞெரேரென நோக்கல் உரித்தன்று -கடுகப்பார்த்தல் நுமக்குரிய தொழிலன்று ; அதற்குக்காரணமென்னையெனின், மெல் அடி நிரை செலல் நெறி மாறுபடுகுவிர்- மெல்லிய அடியாலே நிரைத்துச் செல்லுதலையுடைய வழிதப்புவிர்; ஓம்புமின் - ஆதலால் அங்ஙனம் நோக்குதலைப்பாதுகாப்பீர் ; இதுவும் ஆற்றினது அருமை (67) கூறிற்று.
1அலகு, பலகறை - சோழி ; பறையலகென்பதுபலகறையென மருவிற்றென்பர் ; (சீவக. 2773, ந.) ;" பறையலகே, யைதாம் பலகறையென் றானவே " (ஆனந்த.வண்டு. 415) 2 வேர் - அடிக்குருத்து ; இது முருந்தெனவழங்கும். 3 நேர்கொள் நெடுவரை - செங்குத்தானமலை.
|