242. வரை சேர் வகுந்தின் கானத்துபடினே - மலையைச் சேர்ந்த வழியினையுடைய காட்டிடத்தே செல்ல்லின், 243 - 9. [ கழுதிற் சேணோ னேவொடுபோகி, யிழுதி னன்ன வானிணஞ் செருக்கி, நிறப்புண்கூர்ந்த நிலந்தின் மருப்பி, னெறிக் கெடக் கிடந்தவிரும்பிண ரெருந்தி, னிருடுணிந் தன்ன வேனங்காணின்,முளிகழை யிழைந்த காடுபடு தீயி, னளிபுகை கமழா திறாயினிர்மிசைந்து :] கழுதில் சேணோன் (243) நிறம் புண்கூர்ந்த (245) ஏவொடு போகி (243) நெறிகெடகிடந்த (246)ஏனம் (247) - பரணின்மேலிருந்த யானை முதலியவற்றிற்குஎட்டாதவன் எய்த மருமத்திற்புண் மிகுதற்குக் காரணமானஅம்போடேபோகி நெறிகெடக் கிடந்த பன்றி, நிலம் தின் மருப்பின் (245) இழுதின்அன்ன வால் நிணம் செருக்கி (244) இரு பிணர் எருத்தின்(246) இருள் துணிந்தன்ன ஏனம் (247) - கிழங்குகளை அகழ்ந்துதின்கையினாலே மண் தின்றுதேய்ந்த கொம்பினையும்நெய்விழுதை யொத்த வெள்ளியநிணம் செருக்கும்படிகரிய சருச்சரையையுடைத்தாகிய கழுத்தினையுமுடையஇருள் அற்றுக்கிடந்தாற்போன்ற ஏனம், செருக்கவெனத் திரிக்க. ஏனம் காணின் (247) முளி கழை இழைந்தகாடு படு தீயின் (248) நளி புகை கமழாது 1 இறாயினிர்மிசைந்து (249) - பன்றியைக் கண்டீராயின் உலர்ந்தமூங்கில் தம்மில் இழைந்ததனாற் பிறந்த காடெங்கும்உண்டாகிய தீயினாலே செறிந்த புகைநாறாமல் 2வக்கி மயிர்போகச் சீவித் தின்று, 250 - 51. [ துகளறத் துணிந்த மணிமரு டெண்ணீர்க்,குவளையம் பைஞ்சுனை யசைவிடப் பருகி :] குவளை அம் பைஞ்சுனைதுகள் அறத் துணிந்த மணி மருள் தெள் நீர் அசைவு விடப்பருகி - குவளையால் அழகிய பசிய நிறத்தவாகியசுனையில் கலக்கமறக் தெளிந்த 3 பளிங்கென்றுமருளும்4தெளிந்தநீரை வழியின் இளைப்புத்தீரும்படி குடித்து, அசைவு : விகாரம். 252. [ மிகுத்துப் பதங்கொண்ட பரூஉக்கட்பொதியினிர் :] பரூஉ கண் பதம் மிகுத்து கொண்டபொதியினிர் - பருத்த இடத்தையுடைய
1 இறாவுதல் - நெருப்பில் வாட்டி மயிர்போகச்சீவுதல். 2 வக்குதல் - வாட்டுதல் ; " வன்பெரும்பன்றி தன்னை யெரியினில் வக்கி ", "கொழுப்பரிந்து, வந்தனகொண் டெழுந்தழலில் வக்குவனவக்குவித்து " (பெரிய. கண்ணப்ப. 117, 145) 3 குறிஞ்சிப். 57, குறிப்புரை. 4 துணிந்த - தெளிந்த ; " துணிநீர்- தெளிந்தநீர் " (மதுரைக், 283, ந.)
|