633

படத்தினையும் அழகியகண்ணினையுமுடையவலிமிகுகின்ற சினத்தவாகிய யானைவலியைக் கெடுத்துவிழுங்கும் விழுந்துகிடக்கின்ற பெருமரங்களையொக்கும்பெரும்பாம்பு கிடக்கின்ற வழியைவிலங்கி,

பெரு பயம் கழியினும் (264) ஊழ் இறந்து(263) இகந்து சேண்கமழும் பூவும் உண்டோர் (262) மறந்துஅமைகல்லா பழனும் (263) மாந்தர் துன்னார் (264) - அவற்றாற்கொள்ளும் பெரிய பயன் கொள்ளா மற்போகிலும்முற்காலம் அடிப்பட்டுப் போந்த முறைமையைக்கடந்துதாம் நிற்கின்ற இடத்தைக்கடந்து தூரியநிலத்தே சென்றுநாறும்பூவையும் நுகர்ந்தவர் மறந்து உயிர்வாழ்தலாற்றாதபழங்களையும் தெய்வங்களன்றி மானிடர் அணுகாராகையினாலே,

ஊழிறந்து துன்னாரென்க.

இரு கால் வீயும் (265) பழனும் (263)கயம் கண்டன்ன (259) பெரு மரம் குழாமும் (265) - நீளுங்காம்பையுடையஅப் பூக்களையும் பழத்தையும் குளத்தைக்கண்டாற்போலும்குளிர்ச்சியையுடைய பெரிய மரக்குழாத்தினையும்,

266 - 7. [ இடனும் வலனு நினையினிர் நோக்கிக்,குறியறிந்தவையவை குறுகாது கழிமின் :] நினையினிர்குறி அறிந்து இடனும் வலனும் நோக்கி அவை அவை குறுகாதுகழிமின் - யான்கூறியதனை நினைத்து அவற்றின் குறிகளையறிந்துஇடத்தினும் வலத்தினும் பார்த்து அவையிற்றை அவையிற்றை அணுகாமற்போவீர் ;

விலங்கி நோக்கிக் குறுகாது கழிமினென்க.

இது சோலை (69) கூறிற்று.

268 - 9. கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து கூடு இயத்தன்ன குரல் புணர் புள்ளின் -கொம்புகள் பலவும் முற்றிய பழத்தைத் தன்னிடத்தேகொண்டதாகிய 1ஆலமரத்திடத்தே கூடின பலவாச்சியங்களை யொத்த பல ஓசையுங்கூடின பறவைத்திரளையுடைய,

பறவைத் திரளையுடைய நாடுகாணனந்தலையென்க.

270. 2 நாடு காண் நன தலை மென்மெல அகன்மின் - நாடுகளை யெல்லாம் காணலாயிருக்கின்றஅகன்ற இடத்தையுடைய மலையை மெல்லமெல்லப்போவீர் ;


1 மதுரைக். 543 - 4, குறிப்புரை ; மதுரைக். 538, குறிப்புரை. " இவ்வோசைகளின் வேறுபாடுகளை நோக்கிப்பல்வேறு புள்ளோசைகளை உவமங் கூறினார் " (மதுரைக்.536 - 44, .)

2 "நாடுகாணெடுவரையென்றது தன்மேலேறிநாட்டைக் கண்டின் புறுதற்கு ஏதுவாகிய ஓக்கமுடையமலையென்றவாறு" (பதிற். 85 : 7) ; திருக்குறுங்குடியின்பக்கத்துள்ள ஒரு மலையினுச்சி மிகவும் உயர்ந்து நாடுகாணியெனஇன்றும் வழங்குகின்றது.