634

நனந்தலை : ஆகுபெயர்.

271. மா நிழல் பட்ட மரம் பயில்இறும்பின் - பெரியநிழலுண்டான மரம் நெருங்கின குறுங்காட்டாலே,

272. [ ஞாயிறு தெறாஅ மாக நனந்தலை :]மாகம் ஞாயிறு தெறாஅ நன தலை - ஆகாயத்தில் திரியும்ஞாயிற்றாற் சுடப்படாத அகன்ற இடத்தையுடைய குன்றம்(275),

273 - 5. தேஎம் மருளும் அமையம் ஆயினும்1 இறா வன் சிலையர் மா தேர்பு கொட்கும்குறவரும் மருளும் குன்றத்து படினே - திசை தெரியாமல்மயங்கும் இராக்காலமாகினும் முறியாத வலியவில்லையுடையராய்விலங்குதேர்ந்துநின்று சுழன்றுதிரியும் குறவருமுட்படமயங்குங் குன்றத்தே நீங்கள் செல்லின்,

276 - 7. [ அகன்கட் பாறைத் துவன்றிக்கல்லென, வியங்க லோம்பிநும் மியங்க டொடுமின்:]இயங்கல் ஓம்பி அகல் கண் பாறை துவன்றி கல்லெனநும் இயங்கள் தொடுமின் - அவ்வழியைப் போதலைப்பரிகரித்து அகன்ற இடத்தையுடைய பாறையிலே குவிந்துகல்லென்னும் ஓசைபட நும்முடைய வாச்சியங்களைவாசிப்பீராக ;

278 - 9. பாடு இன் அருவி பயம் கெழுமீமிசை காடு காத்து உறையும் கானவர் உளரே - ஓசையினிதாகிய அருவியின்பயன் பொருந்திய உச்சிமலையிலே காட்டைக்காத்திருக்குங் கானவர் பலருமுளர் ;

ஏகாரம் : ஈற்றசை.

280 - 81. நிலை துறை வழீஇய மதன்அழிமாக்கள் புனல் படு பூசலின் - நிலையாய்ப்போம் துறையைத்தப்பிஆழத்திலேபுக்க வலியழிந்த மாக்கள் புனலிலே அழுந்துகின்றவருத்தங்கண்டு விரைந்தெடுப்பாரைப்போல,

281 - 6. [ விரைந்துவல் லெய்தி, யுண்டற்கினிய பழனுங் கண்டோர், மலைதற் கினிய பூவுங் காட்டி,யூறு நிரம்பிய வாறவர் முந்துற, நும்மி னெஞ்சத்தவலம் வீட, விம்மென் கடும்போ டினியி ராகுவிர் :]

நெஞ்சத்து அவலம் வீட விரைந்துவல் எய்தி - திசைமயக்கத்தாற் கலங்கி அறிவழிந்தநெஞ்சிற் கேடு போம்படி ஓடிக் கடுகவந்து சேர்ந்து,

உண்டற்கு இனிய பழனும் கண்டோர்மலைதற்கு இனிய பூவும் காட்டி - எல்லாரும் உண்டற்குஇனியவாகிய பழங்களையும் கண்டவர்கள் சூடுதற்கு இனியவாகியபூக்களையும் நுமக்குக்காட்டி,

நீர் அவற்றை நுகர்ந்த பின்பு.


1 இறாவன் சிலையரென்பதற்கு இறாமீனைப்போன்றுவளைந்த வலிய வில்லையுடையவரெனப்பொருள்கோடலுமாம் ; " சிலையு மான...............பச்சிறாப்பிறழும் " (பெரும்பாண். 269 - 70) என்னும்அடிகளையும் அவற்றின் குறிப்புரைகளையும் பார்க்க.