635

அவர் ஊறு நிரம்பிய ஆறு முந்துற - அக்கானவர்இடையூறு மிக்க வழியை நுமக்கு முற்படப் போகையினாலே,

நும்மின் 1இம்மென் கடும்போடுஇனியிராகுவிர் - நும்முடைய இம்மென்னும்ஓசையையுடைய சுற்றத்தோடே மனமகிழ்வீர் :

287. அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு- திசைமயக்கம் நாடியறிவார் கூறிய திசையையுட் கொண்டு,

288 - 9. [ குறியவு நெடியவு மூழிழிபுபுதுவோர், நோக்கினும் பனிக்கு நோய்கூ ரடுக்கத்து:]`

புதுவோர் நோக்கினும் பனிக்கும்நோய் கூர் அடுக்கத்து - புதிய மாந்தர் கண்ணால் நோக்கினும்தலைநடுக்கும் நோய்மிக்க பக்கமலையிடத்து,

குறியவும் நெடியவும் ஊழ் இழிபு -குறியனவும் நெடியனவுமாகிய குவடுகளை முறைமைப்பட இழிந்து,

290. அலர் தாய 2 வரி நிழல் அசையினர் இருப்பின் - பூப்பரந்த பல வரிகளையுடையவாகியநிழலிலே இளைத்திருப்பின்,

291. பல திறம் பெயர்பவை கேட்குவிர்- பலகூறுபாடுகளையுடைய வாய் எழுகின்ற ஓசைகளைக் கேட்பீர்;

292. கலை தொடு பெரு பழம் புண் கூர்ந்துஊறலின் - 3 முசுக்கலை தோண்டின பெரிய பலாப்பழம்புண்மிக்குத் தேனூறுகையினாலே,

293. மலைமுழுவதும் கமழும் மாதிரந்தோறும்- மலைமுழுதும் அத்தேன் நாறுந் திசைகடோறும்,

294 - 6. [ அருவி நுகரும் வானர மகளிர்,வருவிசை தவிராது வாங்குபு குடைதொறுந், தெரியிமிழ்கொண்டநும் மியம்போ லின்னிசை :] வாங்குபுவருவிசை தவிராது இமிழ்கொண்ட அருவி நுகரும் வான்அரமகளிர் குடைதொறும் நும் இயம் போல தெரி இன்இசை - உள்ளபண்டங்களை வாங்கிக்கொண்டு வருகின்றவிசைதவிராது ஒலித்தலைக்கொண்ட அருவியை ஆடும் தெய்வமகளிர்அதனைக் கையாற்குடையுந் தோறும் நும்முடைய வாச்சியங்களைப்போல்தாளந்தெரிகின்ற இனியவோசையும்,

297- 9. [ இலங்கேந்து மருப்பி னினம்பிரியொருத்தல், விலங்கன் மீமிசைப் பணவைக் கானவர்,புலம்புக் குண்ணும் புரிவளைப் பூசல் :]


1 சுற்றத்தார் இசைப்புலவராதலால்,இம்மென் கடும்பென்றார்.

2 இடையிடையே வெயிலும் கலந்திருத்தலின்தாயவரி நிழலென்றார் ; வரிநிழலென்பதற்கு, செறியாதநிழலெனப் பொருள்கூறினர் முன் ; (சிறுபாண். 12,.)

3 முசு - குரங்கின் சாதியிலொன்று ;கலை - அதன் ஆண்.