636

விலங்கல் மீமிசை பணவை கானவர்புலம் புக்கு உண்ணும் - மலையின்மேலிட்டபரணிற் கானவர்தினைப்புனத்தைப் புகுந்து தின்னும்,

இலங்கு ஏந்து மருப்பின் இனம்பிரி 1 ஒருத்தல் புரி வளை பூசல் -விளங்குகின்ற ஏந்தின கொம்பையுடைய தன்னினத்தைப்பிரிந்த 2 யானைத் தலைவனைப் பிடித்தற்குவிரும்பின வளைத்தலையுடைய ஆரவாரமும்,

300 - 301. [ சேயளைப் பள்ளி யெஃகுறு முள்ளி,னெய்தெற விழுக்கிய கானவ ரழுகை :] சேய் அளை பள்ளி எள் எஃகு உறு முள்ளின் தெறஇழுக்கிய கானவர் அழுகை - நெடியமுழையாகிய இருப்பிடத்தில் தங்கும் எய்ப்பன்றிதனது கூர்மையுறுகின்ற முள்ளால் எய்துகொல்லுகையினாலேபட்ட கானவர் அழுகின்ற அழுகையும்,

302 - 4. [ கொடுவரி பாய்ந்தெனக்கொழுநர் மார்பி, னெடுவசி விழுப்புண் டணிமார்காப்பென, வறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்:] கொழுநர் மார்பில் கொடுவரி பாய்ந்தென நெடு வசி3விழுபுண் தணிமார் காப்பென அறல் வாழ் கூந்தல்கொடிச்சியர் பாடல் - தம் கணவர் மார்பிலே புலிபாய்ந்ததாகப் பட்ட நெடிய பிளத்தலையுடைய சீரியபுண்ணை ஆற்றுதற்குக் காவலென்று கருதி அறல் வீற்றிருந்தமயிரினையுடைய கொடிச்சியர் பாடும் பாட்டாலெழுந்தஓசையும்,

305 - 6. தலைநாள் பூத்த பொன் இணர்வேங்கை மலைமார் இடூஉம் ஏமம் பூசல் - முதல்நாளிலேபூத்த பொன்போலுங் கொத்தினையுடைய வேங்கைப்பூவைச்சூடுதற்கு மகளிர் புலிபுலியென்று கூப்பிடும் ஏமத்தையுடையஆரவாரமும்,

வேங்கைவளைந்து பூவைக் கொடுத்தலின்,அச்சந்தீர்த்த பூசலென்றார்.

307. கன்று அரைபட்ட 4கய தலைமட பிடி - கன்று வயிற்றிலேயுண்டான மெல்லிய தலையினையுடையமடப்பத்தையுடைய பிடியை,

308. வலிக்கு வரம்பாகிய 5கணவன் ஓம்பலின் - வலிக்கு


1 ஒருத்தல் - யானைத்தலைவன் ; கலித்.46 : 3, ; அகநா. 78 : 4, உரை.

2தலைமைவாய்ந்த ஆண்யானையை யானைத்தலைவனெனக்கூறுதல் மரபு ; " ஊதத், தலைவனே யொத்துப் பொலிந்ததுசந்திர சைலம் " (கம்ப. வரைக்காட்சி .7) ;ஏந்தலெனவும் கூறப்படும் ; " இருங்களிற்றினநிரையேந்தல் " (குறுந். 180 : 2).

3 நெடுநல். 172, குறிப்புரை.

4 கய : மென்மையை யுணர்த்துமுரிச்சொல்; தொல். உரி. சூ. 24.

5 கணவனென்பது அஃறிணையாண்பற்பொருளிலும்வழங்கும் ; " மாயா வேட்டம் போகிய கணவன்,பொய்யா மரபிற் பிணவுநினைந்திரங்கும் " (நற்.103 : 7 - 8) ; " வங்காக் கடந்த செங்காற் பேடை, யெழாலுறவீழ்ந்தெனக் கணவற் காணாது " (குறுந். 151 : 1 -2)