ஓரெல்லையாகிய 1களிறு 2கவழந்தேடிக்கொடுத்துப்பாதுகாத்துப் போகையினாலே, 309. ஒள் கேழ் வய புலி பாய்ந்தென -அப்போக்கினைக்குறித்து ஒளித்திருந்து ஒள்ளிய நிறத்தையுடைய வலியபுலி பாய்ந்ததாக, 309 - 10. கிளையொடு நெடு வரை இயம்பும்இடி உமிழ் தழங்கு குரல் - அப்பிடி தன்சுற்றத்தோடேநெடியமலையிடத்தே கூப்பிடும் இடி யோசைபோலும் முழங்குங்குரலும், இடியுமிழ்ந்த ஓசையை ஆகுபெயரான்உமிழ் என்றார். 311. கை கோள் மறந்த கரு விரல் மந்தி- பார்ப்பைத் தன் கையால் தழுவிக்கோடலை மறந்தகரிய விரலையுடைய மந்தி, 312. அரு விடர் வீழ்ந்த தன் கல்லாபார்ப்பிற்கு - எடுத்தற்கு அரிய ஆழ்ந்த முழையிலேவீழ்ந்திருந்த தன்குட்டிக்கு, கல்லாமை - 3 தனக்குரியதொழிலைக்கல்லாமை. 313 - 4. முறி மேய் யாக்கைகிளையொடு துவன்றி சிறுமை உற்ற களையா பூசல் - தளிரைமேய்ந்துவளர்ந்தவடிவினையுடைய சுற்றத்தோடே நெருங்கி நோய்மிக்கவிலக்கப்படாத ஆரவாரமும், 315 - 6. கலை கை அற்ற காண்பு இன் நெடுவரை நிலைபெய்து இட்ட மால்பு நெறியாக - முசுக்கலைஏறமுடியாதென்று செயலற்ற காட்சியினிய உயர்ந்தவரையிலேநிலைபேறுண்டாகக் கூட்டி நட்ட 4கண்ணேணியேவழியாகச்சென்று,
1 களிறு பிடிக்குக் கவளந்தேடிக்கொடுத்தல்; " கயந்தலை மடப்பிடி யுயங்குபசி களைஇயர் ,பெருங்களிறு தொலைத்த முடத்தா ளோமை " (நற்.137 : 6 - 7) ; " பிடிபசி களைஇய பெருங்கை வேழ, மென்சினையாஅம்பிளக்கும் " (குறுந். 37 : 2 - 3) ; " யானைதன்,கொன்மருப் பொடியக் குத்திச் சினஞ்சிறந், தின்னாவேனி லின்றுணை யார, முளிசினை யாஅத்துப் பொளிபிளந்தூட்ட " (அகநா. 335 : 4 - 7) ; " கறுத்தமுலைச்சூற்பிடிக்குக் கார்யானை சந்தம், இறுத்துக்கை நீட்டுமீங் கோயே" , " சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனிற்றோய்த்தி யானை, மந்த மடப்பிடியின்வாய்க்கொடுப்ப " (ஈங்கோய். 23, 38) ; "வரைசெய் மாக்களி றிளவெதிர் வளர்முளை யளைமிகு தேன்றோய்த்துப்,பிரச வாரிதன் னிளம்பிடிக் கருள்செயும் பிருதி" (பெரியதிருமொழி, 1. 2 : 5) 2 கவழம் : " கவழக் களிப்பியன்மால்யானை " (திணைமாலை. 42) 3 தனக்குரிய தொழிலாவது தாயின்மார்பைஇறுகப் பற்றுதல். 4 கண்ணேணியாவது கணுக்களிலேயேஅடிவைத்து ஏறிச்செல்லும்படி அமைத்துள்ள மூங்கில் ;உச்சியிலுள்ள தேனிறாலை அழிக்கும்
|