317. பெரு பயன் தொகுத்த தேம்கொள் கொள்ளை - பெரியபயனுண்டாகத் 1தேனீத்திரட்டிவைத்த தேனையழித்துக்கொண்டகொள்ளையாலுண்டான ஆரவாரமும், 318 - 9. [ அருங்குறும் பெறிந்த கானவருவகை, திருந்துவே லண்ணற்கு விருந்திறை சான்மென :] திருந்து வேல் அண்ணற்கு விருந்துஇறை சான்மென - திருந்தும் வேலினையுடைய நன்னனுக்குப்புதிதாகக்கொடுத்தற்கு 2 இவற்றிற் கைக்கொண்டபொருள்கள் அமையுமெனக் கருதிச்சென்று, அரு குறும்பு எறிந்த கானவர் உவகை -அழித்தற்கு அரிய 3குறும்புகளை யழித்த கானவர்மகிழ்ச்சியிலுண்டான ஆரவாரமும், 320 - 22. நறவு நாட்செய்த குறவர் தம்பெண்டிரொடு மான்தோல் சிறுபறை கல்லென கறங்கவான் தோய் மீமிசை அயரும் 4 குரவை - 5நறவை நாட்காலத்தேகுடித்த குறவர் தம்பெண்டிரோடேகூடி மான்றோல் போர்த்த சிறுபறை கல்லென்னும்ஓசைபடவொலிப்ப வானைத் தீண்டும் உச்சி மலையிலேஆடுங் குரவைக்கூத்தின் ஆரவாரமும், 323 - 4. [ நல்லெழி னெடுந்தேரியவுவந் தன்ன, கல்யா றொலிக்கும் விடர்முழங் கிரங்கிசை:] நல் எழில் நெடு தேர் இயவு வந்தன்ன ஒலிக்கும் கல்யாறு விடர் முழங்கு இரங்கு இசை - நல்ல அழகினையுடையநெடிய தேர்கள் வழியிலே ஓடிவந்த தன்மையவாக ஒலிக்கும்கல்லின்மேல்வரும் யாறுகள் முழைஞ்சுகளிலேவீழ்ந்துமாறாதொலிக்கும் ஓசையும், 325- 7. நெடு சுழி பட்ட கடுங்கண் வேழத்துஉரவு சினம் தணித்து பெரு வெளில் பிணிமார் விரவுமொழி பயிற்றும் பாகர்
பொருட்டுச் செங்குத்தான மலையிலேறிச் செல்வதற்குஅதன் அயலில் இவ்விரண்டு மூங்கில்களைக்கூட்டி நிறுத்தியமைப்பது வழக்கம். 1 " உய்த்தீட்டுந் தேனீ " (நாலடி.10) 2 இவற்றில் - இச்சிற்றரண்களில். 3 குறும்பு - பகைவர் தங்கும் சிற்றரண். 4 குரவை இருபாலாரும் விரவி ஆடுவதாதலின்,குறவர் தம் பெண்டிரொடு அயருங் குரவை யென்றார் ;"பெண்டிரொடு விரைஇ, மறுகிற்றூங்குஞ் சிறுகுடிப்பாக்கத்து" , "வியலறை வரிக்கு முன்றிற் குறவர், மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்" (அகநா.118 : 3 - 4, 232 : 9 - 10) ; "மாயவன்றன் முன்னினொடும்வரிவளைக்கைப் பின்னையொடும்,...............தாதெருமன்றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே" (சிலப். 17); "மாமணி வண்ணனுந் தம்முனும் பிஞ்ஞையு, மாடிய குரவையிஃது" (மணி. 19 : 65 - 6) 5 " நாட்கள்ளுண்டு " (புறநா.123 : 1)
|