64

பத்துப்பாட்டு

குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி - அதுதான் ஆழ்ந்த சுனையிற்பூத்த பூவாற்செய்த வண்டு வீழ்கின்ற கண்ணி,

இஃது ஒற்றுமை நயம்பற்றிச் செயப்படு பொருண்மேல் நின்றது.

‘கார்க் குண்டுசுனை' என்று பாடமாயின், கரிய ஆழ்ந்த சுனையென்க.

200. இணைத்த கோதை - இதழ் பறித்துக் கட்டின மாலையினையும், அணைத்த கூந்தல் - சேர்த்தின கூந்தலினையும்,

201. முடித்த குல்லை - இலையைத் தலையிலே யணிந்த1கஞ்சங் குல்லைனையும்,

இலை உடை நறு பூ - இலையையுடைய நறிய பூங்கொத்துக்களையும்,

202 - 3. செ வால் மராஅத்த மால் இணர் இடை இடுபு சுரும்பு உண தொடுத்த பெரு தண் மா தழை - செவ்விய காலினையுடைய மராத்திடத்தனவாகிய வெள்ளிய கொத்துக்களை நடுவே வைத்துச் சுரும்பு தேனை யுண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகினையுடைய தழையை,

குல்லையையும் பூவையும் வாலிணர் இடையிட்டுத் தொடுத்த தழையென்க.

204. [ திருந்துகா ழல்கு றிளைப்ப வுடீஇ:]2காழ் திருந்து அல்குல் திளைப்ப உடீஇ - வடங்கள் திருந்தும் அல்குலிடத்தே அசையும்படி உடுத்து,

அல்குற்றிளைப்பவென்னும் வல்லொற்று விகாரமாயிற்று.

205. [ மயில் கண்டன்ன மடநடை மகளிரொடு :]

மயில் கண்டன்ன மகளிரொடு - 3சாயலுடைமையான் மயிலைக் கண்டாற்போன்ற மகளிரொடு,

மடநடை மகளிர் - மடப்பம் பொருந்திய ஒழுக்கத்தினையுமுடைய மகளிர்.

தழையை யுடுத்து மயில் கண்டன்ன மகளிரென்க.

உடுத்தென்னும் வினையெச்சம் அன்னவென்னும் பெயரெச்சமாகிய உவம உருபோடு முடிந்தது.


னுரையில் உள்ள, ‘அகைத்தல் - வலிய மலர்த்தலுமாம்' என்ற பகுதியும் இங்கே கருதத்தக்கன.

1."கஞ்சங் குல்லை கஞ்சா வாகும்" (திவா.)

2. காழ் - புடைவை (வேறுரை)

3. " மயிலியன் மடவரல்" (சிலப். குன்றக்.); "அயில்வே லண்ணல் கூறிய, மயிலேர் சாயல் வண்ணமு மதுவே" (பொருளியல்); "விளங்கியலான் மயிலாம்" (திருச்சிற். 29)