லும் (314) கொள்ளையும் (317) உவகையும்(318) குரவையும் (322) இசையும் (324) ஓதையும் (327) பூசலும்(329) கம்பலையும் (335) ஓதையும் (339) ஏத்தமும் (345) குன்றகச்சிலம்பும்(344) ஒருங்கியைந்தீண்டப்பட்டு (345) ஒழிந்த ஓசைகளும்துவன்றுகையினாலே (346) மலைகளாகிய யானைக்குண்டாகின்றவொலி (348) பலதிறம்பெயர்பவை (291) மாதிரத்தியம்ப(348) அவற்றைக் கேட்குவிர் (291) என முடிக்க. இருப்பிற் (290) கேட்குவிர் (291) என்க. மலைக்கு யானையை உவமித்து அதன்கட்பிறந்தஓசையைக் கடாமெனச்சிறப்பித்தவதனால், இப்பாட்டிற்குமலைபடுகடாமென்று பெயர் கூறினார். 349 - 51. [குரூஉக் கட் பிணையற் கோதைமகளிர் - முழவுத்துயிலறியா வியலு ளாங்கண், விழவினற்றவன் வியன்கண் வெற்பே :] அவன் வியன் கண் வெற்பு - அந்நன்னனுடையஅகன்ற இடத்தையுடைய மலை, குரூஉ கண் பிணையல் கோதை மளிர் -பலநிறம் பொருந்தின இடத்தையுடையதாகிய பிணைத்தலையுடைய மாலையினையுடைய மகளிர் ஆடற்கு ஏற்ற, முழவு துயில் அறியா வியலுள் ஆங்கண்விழவின் அற்று - முழவு கண்ணுறக்கமறியாத அகன்ற ஊரிடத்துக்கொண்டதிருநாளையொத்துச் சிறந்திருக்கும் ; 352 - 3. கண் தண்ணென கண்டும் கேட்டும்உண்டற்கு இனிய பல பாராட்டியும் - காண்டற்கு இனியவற்றைக்1கண்குளிரக்கண்டும் கேட்கப்படுவனவற்றைச்செவிகுளிரக்கேட்டும் உண்டற்கு இனிய பல உணவுகளைக்கொண்டாடியுண்டும், 354 - 5. [ இன்னும் வருவ தாக நமக்கெனத்,தொன்முறை மரபினி ராகி :] நமக்கு இன்னும் வருவதாகஎன தொல் முறை மரபினிர் ஆகி - நமக்கு மேலும் இந்நுகர்ச்சிஉண்டாவதாகவென்று விரும்பிப் பழைய உறவான மக்களைப்போலும்முறைமையினையுடையிராய்ச் சில நாள் தாங்கி, 355- 6. பல மாண் செரு மிக்கு புகலும் திருஆர் மார்பின் - பலவாய் மாட்சிமைப்பட்ட 2வஞ்சிமுதலியபோர்த்தொழில் மிக்குநடத்தலாலே உலகம்புகழுந் திருமகள் நிறைந்திருந்தமார்பினையுடைய நன்னனுடைய,
1 " கரங்கூப்பிக் கண்குளிரக்கண்டு " (முருகு, இறுதிவெண்பா, 9) 2 வஞ்சி - போர்செய்தற்குப்பகைவர்மேற்செல்லுதல்.
|