357. உரும் உரறு கருவிய பெருமலை பிற்பட- உருமேறுமுழங்குந் தொகுதியையுடைய பெரியமலை நுமக்குப்பின்னாம்படி, 358 - 9. இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர்நறு கார் அடுக்கத்து குறிஞ்சி பாடி - அதிசயம்நெருங்கின இனிய யாழையுடைய விறல்பட ஆடுமகளிர் நறியகரிய பக்கமலையிலே குறிஞ்சியென்னும் பண்ணைப்பாட, குரல் : ஆகுபெயர். பாடி, பாடவென்க. 360. கை தொழூஉ பரவி பழிச்சினிர்கழிமின் - நீரும் ஆண்டுறையும் தெய்வங்களைக் கையாலேதொழுதுஎம் குறை முடித்தால் நுமக்கு இவை தருதுமென்று பரவுக்கடன்பூண்டு வாழ்த்திப் போவீர் ; மரபினிராகிப் (355) பாடிப் (359) பழிச்சி(360) மலை பிற்படக் (357) கழிமின் (360) என்க. 361. [ மைபடு மாமலைப் பனுவலிற்பொங்கி :] பனுவலின் பொங்கி மை படு மா மலை - சூல்முதிர்வதற்கு முன்பு 1 எஃகுறு பஞ்சிபோலப்பொங்கிச் சென்று கார்காலம் வருமளவும் மேகம் கிடக்கும்பெரிய மலையிடத்தில், 362. கை தோய்வு அன்ன கார் மழை தொழுதி- கை சென்று பிடிக்குந் தன்மையையொத்த அணுகுதலையுடையகரிய மேகத்திரள், 363. தூஉய் அன்ன துவலை துவற்றலின் -வலியத் தூவினாலொத்த துவலைகளைத் தூவுகையினாலே, 364. தேஎம் தேறா கடு பரி கடும்பொடு- திசைகளைத் துணிந்து கொள்ளமாட்டாத கடிய செலவினையுடையசுற்றத்தோடே, 365. காஅய் கொண்ட நும் இயம் தொய்படாமல்- காவிக்கொண்ட நும்முடைய வாச்சியங்கள் நனையாதபடி, 366. கூவல் அன்ன விடரகம் புகுமின் -கிணறுகள்போன்ற 2 முழைஞ்சுகளிடத்தேபுகுவீர், 367. இரு கல் இகுப்பத்து இறு வரை சேராது- பெரிய கல்லினது திரட்சியினிடத்து முறிந்துநின்றமலைகளைச்சேராதே, 368 - 72. [ குன்றிடம் பட்ட வாரிடரழுவத்து, நின்று நோக்கினுங் கண்வாள் வௌவு, மண்கனைமுழவின் றலைக்கோல் கொண்டு, தண்டுகா லாகத் தளர்தலோம்பி, யூன்றினிர் கழிமி னூறுதவப் பலவே :] நின்று கண் நோக்கினும் வாள்வௌவும் (369) இடம் பட்ட குன்று (368) - நின்று கண்ணாற்பார்க்கினும்3கண்ணினொளியைத் தன் அழகாலேவாங்கிக்கொள்ளும் இடமுண்டாகிய மலையில்,
1 எஃகுறுபஞ்சி - பன்னியபஞ்சு ; நற்.247 : 4 2 முழைஞ்சு - குகை. 3 மதுரைக். 343 - 5, அகநா. 217: 2, குறிப்புரை.
|