643

உம்மை : அவற்றைநுகர மனத்தாற்கருதின்அம்மனத்தையும் வாங்கிக் கொள்ளுமென எச்சவும்மை.

அரு இடர் அழுவத்து (368) ஊறு தவ பல (372)- பொறுத்தற்கு அரிய வருத்தத்தைச் செய்யும்குழிகளிடத்துப் பிறக்கும் இடையூறுகள் மிகப்பல ;அவற்றை,

மண் கனை முழவின் தலை (370) தண்டுகாலாக (371) கொண்டு (370) - மார்ச்சனைசெறிந்த முழவிடத்திற்காமரத்தை நுமக்குக் காலாக வாங்கிக்கொண்டு,

தளர்தல் ஓம்பி (371) கோல் (370) ஊன்றினிர்கழிமின் (372) - அடி உள்ளேவிழுதலைப் பரிகரித்து அத்தண்டாகியகோலை ஊன்றிப் போவிர் ;

373. அயில் காய்ந்தன்ன கூர் கல்பாறை - வேல்காய்ந்தாற் போலும் 1குடுமிக்கூர்ங்கற்களையுடைய பாறையில்,

374. வெயில் புறந்தரூஉம் இன்னல்இயக்கத்து - குளிர்ச்சி வாராமல் வெயில்பாதுகாக்கும் இன்னாமைசெய்யும் வழியிடத்திற்போம்பொழுது,

375. கதிர் சினம் தணிந்த அமயத்துகழிமின் - ஞாயிறு 2 சினம் மாறின அந்திப்பொழுதிலேபோவீர் ;

376 - 8. [ உரைசெல வெறுத்தவவ னீங்காச்சுற்றமொடு, புரை தவ வுயரிய மழைமருள் பஃறோ,லரசுநிலை தளர்க்கு மருப்பமு முடைய :]

உரை செல வெறுத்த அவன் நீங்காசுற்றமொடு புரை தவ உயரிய மழை மருள் பல் 3தோல்அருப்பமும் உடைய - புகழ் பரக்கும்படி செறிந்த நன்னனுடையநீங்காத படைத்தலைவரோடே உயர்ச்சி மிகவுயர்ந்த4மேகமென்று மருளும் பல யானைத்திரளையுடையஅரண்களையும் அவ்வழியுடைய ;

அரசு நிலை தளர்க்கும் அருப்பம் -பொரவந்த அரசர் நிலையுடைமையைக் கெடுக்கும் அரண்,

379. பின்னி அன்ன பிணங்கு அரில்நுழை தொறும் - அவ்வரண்களிற் பின்னிவைத்தாலொத்தகெடிபிணங்கின சிறுகாட்டையுடைய சிறிய வழிகடோறும்,


1 " பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்" (அகநா. 5 : 13)

2 சினம் : " காய்சினந் தவிராதுகடலூர் பெழுதரு, ஞாயிறு " (புறநா. 59 : 5 - 6) என்றவிடத்துச்சினமென்பதற்கு வெம்மையெனப் பொருள் கூறுவர்அதனுரையாசிரியர்.

3 "மழையென மருளும்பஃறோல் "(புறநா. 17 : 34) என்னுமிடத்துத் தோலென்பதற்குப்பரிசையெனப் பொருள்கூறுவர் அதனுரையாசிரியர்.

4 மலைபடு. 530, குறிப்புரை.