கானம் பல (385) ; ஆண்டுக் கல் (389) நட்ட (388) கவலை பல (389) ; அக்கல்லிற்கு மருப்பிகுத்துத் துனைமின் (391) ; அப்பொழுது புதுவிர் (392) புல் முடிந்திடுமின் (393) எனக்கூட்டுக. 394. செல்லும் தேஎத்து - நீங்கள் போம் தேசத்திலே, 394 - 6. [ பெயர்மருங் கறிமார், கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த, கடவு ளோங்கிய காடேசு கவலை :] கல் எறிந்து மருங்கு பெயர் அறிமார் எழுதிய கடவுள் - கல்லை 1இடந்துகொண்டு அதனிடத்தே இவ்வாறே பொருதுபட்ட இன்னானென்று அவன் பெயரை உலகமறிவதற்கு எழுதிய கடவுள், நல் அரை மராத்த கடவுள் - நல்ல அரையினையுடைய மராத்திடத்தனவாகிய கடவுள். என்றது, மராமரத்தின் நிழலிலே நட்ட கல்லென்றவாறு. கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை - அக்கடவுளின் தெய்வத்தன்மை மிக்க தன்கொடுமையாற் பிறகாடுகளையிகழும் பலவழிகளில், 397 - 8. [ ஒட்டா தகன்ற வொன்னாத் தெவ்வர், சுட்டினும் பனிக்குஞ் சுரந்தவப் பலவே :] ஒட்டாது அகன்ற ஒன்னா தெவ்வர் சுரம் தவ பலவே - நன்னனைப் பொருந்தாதே நீங்கின அவன் ஏவற்குப் பொருந்தாத பகைவரிருக்கும் அருநிலங்கள் மிகப்பல ; இதனால் இகழுநர்ப்பிணிக்கும் ஆற்றல் (73) கூறினார். சுட்டினும் பனிக்கும் சுரம் - தத்தமூர்களிலேயிருந்து நினைப்பினும் தலைநடுங்குவிக்குஞ் சுரம், 399 - 400. தேம் பாய் கண்ணி தேர் வீசு 2கவி கை ஓம்பா வள்ளல் படர்ந்திருக்கும் எனினே - தேன்சொரிகின்ற கண்ணியினையும் தேரைச் சிதறும் கொடுத்துக்கவிந்த கையினையுமுடைய 3தனக்கென்று ஒரு பொருளும் பேணாத நன்னனை நினைத்துச் செல்கின்றோமென்று கூறுவீராயின், 401 - 2. [ மேம்பட 4வெறுத்தவன் றொஃறிணை மூதூர், ஆங்
1 இடந்து - பெயர்த்து. 2 " ஆனாதீயுங் கவிகை ", " இசை விளங்கு கவிகை " (புறநா. 54 : 7, 102 : 6) என்ற இடங்களில் கவிகையென்பதற்கு இடக்கவிந்தகையென வுரையெழுதுவர் அதன் உரையாசிரியர் ; " கலம்பெயக் கவிந்த கழறொடித் தடக்கையின் " (மலைபடு. 577) 3 மதுரைக். 146- ஆம் அடியின் உரையையும் அதன் குறிப்புரையையும் பார்க்க. 4 செல்வத்தைக் குறிக்கும் வெறுக்கையென்னும் பெயருக்கும், இங்கே செல்வமுண்டான என்று பொருள் செய்யப்பட்டிருக்கும்
|