646

கன மற்றே நம்ம னோர்க்கே :] நம்மனோர்க்கு ஆங்கனம் மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் அற்று - நம்மையொக்கும் பரிசிலர்க்கு அப்பகைப்புலம் எல்லாவூர்களினும் மேலாம்படி செல்வமுண்டான நன்னனுடைய பழைதாகிய உயர்ந்த ஒழுக்கத்தினையுடைய பழையவூர்களையொக்கும் ;

403. அசைவுழி அசைஇ அஞ்சாது கழிமின்- இளைத்தவிடத்தே யிளைப்பாறி அஞ்சாமற் போவீர் ;

404 - 5. புலியுற வெறுத்ததன் வீழ்பிணை யுள்ளிக் , கலைநின்று விளிக்குங் கான மூழிறந்து :] புலி உற வீழ் தன் பிணை உள்ளி வெறுத்த கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து - புலி பாய்கையினாலே பட்ட தன் பிணையை நினைத்து வெறுத்த கலைநின்று கூப்பிடும் அக்காட்டை முறைமைப்படப்போய்,

406. சிலை ஒலி வெரீஇய செ கண் மரைவிடை - வில்லின் ஓசைக்கு வெருவின சிவந்த கண்ணையுடைய மரையேறு,

407. தலை இறும்பு கதழும் நாறு கொடி புறவின் - முட்பட்ட குறுங்காட்டிலே விரைந்தோடும் நாறுகின்ற கொடிகளையுடைய காட்டிடத்து,

408 - 9. வேறு புலம் படர்ந்த ஏறு உடை இனத்த வளை ஆன் தீ பால் - வேற்றுப்புலங்களிலே சென்று மேய்ந்த ஏற்றையுடைய நிரையிடத்தனவாகிய சங்குபோல் வெள்ளிய பசுக்களின் இனிய பாலை,

409 - 10. 1 மிளை சூழ் கோவலர் வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின் - நிரையைக் காவல் சூழ்கின்ற இடையர் வளையினையுடைய மகளிர் மனமகிழும்படி கொண்டுவந்து சொரிகையினாலே,

411 - 12. [ பலம்பெறு நசையொடு பதிவயிற் றீர்ந்தநும், புலம் புசே ணகலப் புதுவி ராகுவிர் :] பலம் பெறு நசையொடு நும் பதிவயின் தீர்ந்த புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர் - பலத்தைப்பெறவேண்டு மென்னும் ஆசையுடனே நும்முடைய ஊரினின்றும் போந்தவருத்தம் விட்டுநீங்குகையினாலே விருந்தாந்தன்மையையுடையிராகுவிர் ;

413 - 6. [ பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன, தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇக், கல்லென் கடத்திடைக் கடலி னிரைக்கும், பல்யாட் டினநிரை :] பகர் பல விரவு நெல்லின் அரி அன்ன தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ கல்லென் கடத்திடை கடலின் இரைக்கும் பல்யாட்டு இனம் நிரை - பண்டம்விற்ற பலவுங்கூடுநெல்லின் அரிசியையொத்தனவாகக் கிடாய்விரவுகின்ற செம்மறித்திரள் வெள்யாட்


வெறுத்த வென்னுஞ் சொல்லிற்கும் இயைபு ஏதேனும் உண்டோவென்பது ஆராய்ச்சிக் குரியது.

1 " மிளைசூழ் கோவலரிருக்கை " (சிலப். 16 : 4)