டுடனே கலந்து கல்லென்கிற ஓசையையுடைய காட்டிடத்தே கடல் போலே யொலிக்கும் பல யாட்டினினங்களையுடைய திரள்களிலே, பகர்நெல் : வினைத்தொகை, 416. எல்லினிர் புகினே - இராக்காலத்தையுடையிராய்ச்சொல்லின், மனத்தே அக்காலத்தைக் கருதுதலின்,உடைமையாயிற்று. 417. பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் - பாலும் பாற்சோறும் நுமக்கென்று சமையாமல் தமக்குச் சமைத்திருந்தவற்றைப் பெறுகுவிர் ; 418. துய் மயிர் அடக்கிய சேக்கை அன்ன -மெல்லிய தலைமயிரினையுடைய சேணமிட்ட படுக்கையையொத்த, 419. மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி - 1ஆடுகளின் மெய்யையுரித்து ஒன்றாகத்தைத்த வார்மிதித்த தோற்படுக்கையிலே, 420. தீ துணையாக சேந்தனிர் கழிமின் - கொடிய விலங்குகள் வாராதபடி 2இடையர் ஒளித்த நெருப்புத் துணையாகத் தங்கிப் போவிர் ; 421 - 2. 3கூப்பிடு கடக்கும் கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் கூவை காணின் - கூப்பிடாத அவ்வெல்லையைக் 4 கூவாநிற்கும் கூரிய நல்ல அம்பினையும் கொடியவில்லினையுமுடைய நாடுகாக்கும் வேடருடைய திரளைக் கண்டீராயின்,அவர்களுக்கு, 423 - 4. படியோர் தேய்த்த பணிவு இல் ஆண்மை கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே - தன்னை வணங்காதாரை அழித்த தாழ்ச்சியில்லாத பகைவரை ஆளுந்தன்மையினையுடைய நன்னனை நினைத்துப் போகின்றோமென்று கூறின், கொடியோள் கணவன் - கொடியினையுடையோள் கணவன் ; இதனால் அவன்தேவி கற்புமிகுதி கூறினார். 5இது நன்னனென்னும் பொருட்டாய் நின்றது. 425 - 6தடியும் கிழங்கும் 6தண்டினர் தரீஇ ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை - தசைகளையும் கிழங்குகளையும் நும்மைநலிந்து
1' கிடாயினுடைய தோல்களைப் பாயலாகவுடைய முதியோன் ' (பெரும்பாண். 151, ந.) 2 " கடைகோற் சிறுதீ யடைய மாட்டித், திண்கா லுறியன் பானையனகல, னுண்பஃறுவலை யொருதிற நனைப்பத், தண்டுகா லூன்றிய தனி நிலை யிடையன் " (அகநா. 274 : 5 - 8) 3கூப்பிடு - ஓரெல்லை ; " நாக்குமுக் கூப்பிடுவளர்ந்து " , " முக்கூப்பிடு வளர்ந்தநெடு நாக்கடிது கொண்டாய் " (சிதம்பர. சோமநாத. 21, 34 ) 4 (பி-ம்.) ' கடாவாநிற்கும் ' 5 முருகு. 6, குறிப்புரை. 6 " தண்டி - பலகாலலைத்து " (பொருந. 104, ந.)
|