649

கூழை அற்கு பெறுகுவிரென்க.

440 - 43. [ பொன்னறைந்தன்ன நுண்ணே ரரிசி, வெண்ணெறிந்தியற்றிய மாக்க ணமலை, தண்ணெ னுண்ணிழு துள்ளீ டாக,வசையினிர் சேர்ப்பி னல்கலும் பெறுகுவிர் :]

அசையினிர் சேப்பின் - இளைப்பாறி அவ்விடத்தே சிலநாள் தங்கு வீராயின்,

பொன் அறைந்தன்ன நுண் நேர் அரிசி வெண்ணெறிந்து இயற்றிய மா கண் அமலை - பொன்னை நறுக்கினாலொத்த நுண்ணிய ஒத்த அரிசியை வெள்ளையெறிந்தாக்கின கரிய இடத்தையுடைய சோற்றுத்தடியை,

தண்ணென் நுண் இழுது உள்ளீடாக அல்கலும் பெறுகுவிர் -தண்ணென்ற நுண்ணிய நெய்விழுதை உள்ளே இட்டுண்ணும்படி நாடோறும் பெறுகுவிர் ;

444. விசயம் கொழித்த பூழி அன்ன- கருப்புக் கட்டியைக் கொழித்த பொடியையொத்த,

445. உண்ணுநர் தடுத்த இடி நுண் நுவணை - 1தன்னை நுகர் வாரை வேறொன்றை நுகராமல் தடுத்த இடித்தலால் நுண்ணியதாகிய தினைப் 2பிண்டியொடு,

சேப்பின் நுவணையோடே அமலையை இழுது உள்ளீடாக அல்கலும் பெறுகுவிரென்க.

நுவணையோடென ஓடு விரிக்க.

446 - 7. நொய் மரம் விறகின் ஞெகிழி மாட்டி பனி 3சேண்நீங்க இனிது உடன் துஞ்சி - நொய்ய மரமாகிய விறகாலாக்கின 4கடைக்கொள்ளியை எரித்துப் பனி விட்டுநீங்கும்படி இனிதாகச் சேரத்துஞ்சி,

448. புலரி விடியல் புள் ஓர்த்து கழிமின் - இராக்காலம் நீங்குதலையுடைய விடியற்காலத்தே நிமித்தம் பார்த்துப் போவிர் ;

புள்ளோர்த்தென்றதற்குப் புட்களின் குரல்கேட்டுப் போவீரென்றுமாம்.

இத்துணையும் கானமும் (69) கானத்து ஆற்றினது நன்மையும் அசையுநற்புலமும் (67) வல்சியும் (68) சேரக்கூறினார்.

449. புல் அரை காஞ்சி - புற்கென்ற அரையினையுடைய காஞ்சி மரத்தினையும்,


1 மலைபடு. 138-ஆம் அடியின் உரையையும் அதன் குறிப்புரையையும் பார்க்க. 

2 பிண்டி - மா.

3 "சேணீங்கிய - கைவிட்டு நீங்க " (மதுரைக். 198 , ந.)

4 கடைக்கொள்ளி : பெரும்பாண்ள் 177 - 9, குறிப்புரை.