650

புனல் பொரு 1புதவின் - நீர்வந்துபொருகின்ற அறுகுகளையும்,

450. மெல் அவல் - மெல்லிய விளைநிலங்களையும்,

450 - 53. [ இருந்த வூர்தொறு நல்லியாழ்ப், பண்ணுப்பெயர்த் தன்ன காவும் பள்ளியும், பன்னா ணிற்பினுஞ் சேந்தனிர் செலினு, நன் பல வுடைத்தவன் றண்பணை நாடே :]

காவும் - பொழில்களையும்,

பள்ளியும் - இடைச்சேரிகளையுமுடைய,

அவன் தண் பணை நாடே - நன்னனுடைய குளிர்ந்த மருதநிலத்தையுடைய நாடு,

பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும் இருந்த ஊர்தொறும் - பலநாள் நிற்பினும் ஒருநாள் தங்கிப்போகினும் நீர் நுகர்வுதற்குக் குடி நீங்காதிருந்த ஊர்கள் தோறும்,

நல் யாழ் பண்ணு பெயர்த்தன்ன நல் பல உடைத்து - நல்ல யாழின் பண்ணை மாறி வாசித்த தன்மையவாக நன்றாகிய பல பொருள்களையுடைத்து ;

காஞ்சி முதலியவற்றை உடையநாடு ஊர்தோறும் நன்பலவுடைத்தென்க.

2பண் ஒன்னையொன்றொவ்வாது இனிதாயிருக்குமாறுபோல நுகரும் பொருள்களும் ஒன்றையொன்றொவ்வா இனிமையுடையவென்றார்.

454 - 5. கண்பு மலி பழனம் கமழ துழைஇ வலையோர் தந்த இரு சுவல் வாளை - கண்பு நெருங்கின மருதநிலத்தைப் பூக்கள்நாற வளைத்து ஆராய்ந்து வலையைவீசுவார் கொண்டுவந்த பெரிய கழுத்தினையுடைய வளைத்தடியை,

456 - 8. நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில் பிடி கை அன்ன செகண் வரால் துடி கண் அன்ன குறையொடு விரைஇ - ஓரிடத்தில் நிலைபெற நிற்றலையுடையோரிட்ட நெடிய கயிற்றையுடைய தூண்டிலிற் பட்ட பிடியின் கையையொத்த சிவந்த கண்ணையுடைய வராலினது துடியின் கண்ணையொத்த தடியோயேகலந்து,

459 . 3 பகன்றை கண்ணி பழையர் மகளிர் - பகன்றைப் பூவாற் செய்த கண்ணியையுடைய கள்விற்கும் வலையருடைய மகளிர்,


 " புதவொரு விகற்பப் புல்லா கும்மே " (பிங்குல. 3001)

2 " பையு ளுறுப்பிற் பண்ணுப்பெயர்த்தாங்கு அளிக்கும் நனையெனக் கூட்டி, எல்லாப் பண்களிலும் வருத்தத்தைச் செய்யும் உறுப்பினையுடைய பாலைப்பண்கள் பலவற்றையும் ஒரோவொன்றாகப் பெயர்த்து வாசிக்குமாறு போலே ஒன்றையொன்று ஒவ்வாத இன்பத்தை உண்டவர்க்குக் கொடுக்கும் பலதிறத்து மதுவெனவுரைக்க " (பதிற். 65 : 12, உரை) 3 பகன்றை : (குறிஞ்சிப். 88. குறிப்புரை.)