653

கவலை மறுகின் (482) - பல கவர்த்தன்மையையுடைய குறுந்தெருக்களையும்,

1பதி எழல் அறியா பழ குடி (479) துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும் (485) மாடம் மலை என மழை என ஓங்கி (484) - ஊரினின்றும் பேர்தலையறியாத பழையகுடி வெறுப்பில்லாத விருப்பத்தோடே நன்றாதல் பொருந்தியிருக்கும் மாடங்கள் மலையென மழையென ஓங்குகையினாலே,

யாறு என கிடந்த தெருவின் (481) - யாறென்னும்படி கிடந்த பெருந்தெருவினையும்,

2இரண்டு மருங்கின் மாடமுந் தெருவும் யாறும் கரையும் போன்றவென்றார்.

நிதியம் துஞ்சும் (478) அவன் பழவிறல் முது ஊர் நனி சேய்த்து அன்று (487) - காவினையும் மதிலினையும் நியமத்தினையும் மறுகினையும் தெருவினையுமுடைய, பொருட்டிரள் தங்கும் அவன் பழைய வெற்றியையுடைய மூதூர் மிகவும் தூரிதன்றென்க.

இது மூதூர்மாலை (93) கூறிற்று.

488 - 9. பொருந்தா தெவ்வர் இரு தலை துமிய பருந்து பட கடக்கும் ஒள் வாள் மறவர் - நன்னனைப் பொருந்தாத பகைவருடைய கரிய தலைகள் துணியப் பருந்துகள் யப் போரைவெல்லும் ஒள்ளிய வாளையுடைய மறவர்,

490 - 91. கரு கடை எஃகம் சாத்திய புதவின் அரு கடி வாயில் அயிராது புகுமின் - தம்முடைய கரிய காம்பினையுமுடைய வேலைச்சாத்தி வைத்துக் காத்திருக்கின்ற பல தெற்றுவாசல்களையுமுடைய அரிய கோபுரவாயிலை ஐயுறாமற் புகுவிர் ;

492 - 5. [ மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர், வெல்போர்ச் சேஎய்ப் பெருவிற லுள்ளி, வந்தோர் மன்ற வளியர் தாமெனக், கண்டோரெல்லா மமர்ந்தினிதி னோக்கி :]

மன்றில் வதியுநர் சேண் புலம் பரிசிலர் கண்டோர் எல்லாம் - அம்பலங்களிலே தங்குவாராகிய தூரிய நிலங்களினின்றும் வந்த கூத்தர் முதலியோராய நும்மைக் கண்டோரெல்லாம்,


1 " பதியெழு வறியா - பதியினின்றும் பெயர்தலை யறியாத ; எனவே பகையின்மை கூறிற்று. பழங்குடி - தொன்மரபு ; ஆதிகாலத்தேறிய குடியுமாம் " (சிலப். 1 : 13, அடியார்.)

2 " இருகரையும் யாறும்போன்றன, இரண்டு பக்கத்தின் மனைகளும் தெருவுகளும் " (மதுரைக். 359 , ந.)