520. நாகம் -புன்னைப்பூ, திலகம் -திலகப்பூ, நறு காழ் ஆரம் -நறிய வயிரத்தையுடைய சந்தனம், 521. [கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி :] மிளகின் கரு கொடி காய் துணர் பசு கறி - மிளகினது கரிய கொடிகள்காய்த்த கொத்திற் பசியமிளகு, முன்னர் மிளகென்றது முதலை ; கறி, சினை. 522. திருந்து அமை விளைந்த தேன் கள் தேறல் - நன்றாகிய மூங்கிற் குழாயிலே முற்றியதேனாற்செய்த கட்டெளிவு, 523. கான் நிலை எருமை கழை பெய் தீ தயிர் - காட்டிடத்து நிலைமையினையுடைய எருமையினது,மூங்கிற்குழாயிலே தோய்த்த இனிய தயிர், 524. நீல் நிறம்1ஓரி பாய்ந்தென - முற்றுகையினாலே 2நீலநிறத்தையுடைய ஓரிநிறம் பரந்ததாக, 524 - 5. நெடு வரை நேமியின் செல்லும் நெய் கண் இறால் - நெடிய வரையில் இறாலிடத்தை விட்டுப்பாயுந் தேனைத் தன்னிடத்தே உடையஇறால்கள், 526 - 9. [ உடம்புணர்பு தழீஇய வாசினி யனைத்துங், குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி, கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப, நோனாச் செருவினெடுங்கடைத் துவன்றி :] தழீஇய ஆசினி -நன்றென்று கூட்டிக்கொண்ட ஆசினிப்பலா, குடமலை பிறந்ததண் பெரு காவிரி கடல் மண்டு அழுவத்து கயவாய் கடுப்ப - குடகமலையிற்பிறந்த குளிர்ந்த பெரியகாவிரி கடலிலே மிக்குச்செல்கின்ற ஆழத்தையுடைய புகார்முகத்தையொப்ப, நோனா செருவின் நெடு கடை -பகைவர் பொறுத்தலாற்றாத போரினையுடைய தலைவாசலிலே, 3அனைத்தும்உடம்புணர்பு துவன்றி, 530 - 31. 4[ வானத் தன்ன வளமலி யானைத், தாதெருத் ததைந்த முற்ற முன்னி :]
1 "ஓரியென்பது தேன்முதிர்ந்தாற் பரக்கும் நீலநிறம் ; முசுக்கலை யெனினும் அமையும் " (புறநா. 105, உரை) 2 " நீனெய்தாழ்கோதை - நீலநிறத்தையுடைய தேனெய் தங்கியகோதை " (பரி. 11 : 124,பரிமேல்.) 3 இதற்கு உரைகிடைத்திலது ; மேற்கூறிய யாவும்ஒருமிக்கச் சேரப் பெற்று நெருங்கியென்க. 4 இதற்கும் உரைகிடைக்கவில்லை ; மேகங்களை யொத்த வளப்பம் மிகுந்த யானைகளையுடைய தாதாகிய எருக்கள் நெருங்கின முன்றிலையடைந்தென்க.
|