544. வென்றி பல் பகழ் விறலொடு ஏத்தி - வெற்றியாலுண்டாகிய பல புகழ்களை1ஐம்பொறிகளைத் தன் வசமாக்கின வெற்றியோடேபுகழ்ந்து, 545. சென்றது நொடியவும் விடாஅன் - நும்மனத்திற்சென்ற ஏனைப் புகழ்களைமுற்றக்கூறவும் அமையானாய், 545 - 6. நசை தர வந்தது சாலும் வருத்தமும் பெரிது என - என்மேலுள்ள நசை கொண்டுவருகையினாலே என்னிடத்து வந்ததே அமையும் ;வழிவந்த வருத்தமும் பெரிதென முகமன்கூறி, 547 - 8. பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து திருநகர் முற்றம் அணுகல் வேண்டி - பொருகின்ற மாறுபாட்டினை எதிர்கொண்டிருக்கும் படைத்தலைவரோடே பொலிவுபெற்றுச் செல்வத்தையுடைய தன் மனையின் முற்றத்தை நீங்கள் செல்லுதலை விரும்பி, பொலிந்தென்னு மெச்சத்தைஉடையவென்பதனோடு முடிக்க. 549. கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ - கல்லென்னும் ஆரவாரத்தையுடைய சான்றோரிருக்கின்ற நன்றாகிய 2சமயத்திருக்குமண்டபத்தேயிருந்து, வலம் - இடம். இதனால் நல்லிதினியக்குமவன்சுற்றத்தொழுக்கமும் (80), அவன் நாண் மகிழிருக்கையும் (76)கூறினார். 550 - 52. உயர்ந்த கட்டில் உரும்பு இல் சுற்றத்து அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து இலம் என மலர்ந்த கையர் ஆகி - உயர்ந்த அரசவுரிமையினையும், கொடுமையில்லாத அமைச்சர் முதலியோரையும் அகன்ற நாட்டினையும், சுருங்கின அறிவினையுமுடையராய் இரந்து வந்தோர்க்கு யாம்இல்லேமென்று கூறி இல்லையென்று மறித்த கையினையுமுடையராய், கட்டில் - சிங்காதனமுமாம். தாயம் -உரிமைகளெல்லாவற்றையும் கூறிற்றுமாம். 553. தம் பெயர் தம்மொடு கொண்டனர்மாய்ந்தோர் - தம்பெயரை உலகில் நிறுத்தாமல் தம்முடனேகொண்டுபொன்றக் கெட்டுப்போன அரசர், 554 - 6. நெடுவரை இழிதரு நீத்தம் சால் அருவி கடு வரல் கலுழி கட்கு இன் சேயாறு வடு வாழ் எக்கர் மணலினும் பலரே - நெடியமலையில்நின்றுங் குதிக்கும் பெருக்கு நிறைந்த அருவியினது கடியவரத்தினை
1 " புலனைந்தும் வென்றான்றன் வீரமே வீரம் " (தனிப்.) 2சமயத் திருக்குமண்டபம் : சீவக. 2370, ந. ; " சமயமண்டப நிறைந்திருந்ததிரி சங்குமைந்தன் " (அரிச்சந்திர. வேட்டஞ்செய். 16)
|