உடைத்தாகிய பெருக்கினையுடைய கண்ணுக் கினியசேயாற்றின் அறல் வீற்றிருந்த இடுமணலாகிய மணலினும்பலர் ; 557. [ அதனால் , புகழொடுங் கழிகநம் வரைந்த நாளென :] அதனால் நம் வரைந்தநாள் புகழொடும் கழிக என - ஆகையினாலே நமக்குத் தெய்வம் இத்துணைக் காலமிருவென எல்லையிட்டுவிட்ட நாள் புகழோடே கழிந்து போவதாகவென்று கருதி, 558. [ பரந்திடங் கொடுக்கும் விசும்புதோ யுள்ளமொடு :] பரந்து இடம் கொடுக்கும் உள்ளமொடு - கொடுத்தற் றொழிலிலேவிரிந்து அதற்கே இடங்கொடுக்கும் நெஞ்சுடனே, விசும்பு தோய் உள்ளம் - ஆகாயத்தை யொத்த பெரியஉள்ளம், 559 - 60. [நயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரி, துவந்தவுள்ளமோ டமர்ந்தினிது நோக்கி :] நயந்தனிர் உவந்த உள்ளமொடு சென்ற நும்மினும் தான் பெரிது அமர்ந்து இனிது நோக்கி - பரிசில் பெறுதற்கு விரும்பி மகிழ்ந்த நெஞ்சத்தோடே சென்ற நும்மினுங்காட்டில் தான் பெரிதும்முகனமர்ந்து இனிதாகப்பார்த்து, 561 - 2. [ இழைமருங் கறியா நுழைநூற் கலிங்க, மெள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ :] எள் அறு சிறப்பின் இழை மருங்கு அறியாநுழை நூல் கலிங்கம் வெள்அரை கொளீஇ - இகழ்ச்சியற்ற தலைமையினையுடைய இழைபோனவிடமறியாத நுண்ணிய நூலாற் செய்த புடவைகளை,அழுக்கேறின சீலைகள் கிடத்தலின் வெள்ளிதாகியஅரையிலே உடுத்தி, 563 - 6. [ முடுவ றந்த பைந்நிணத் தடியொடு , நெடுவே ணெல்லினரிசி முட்டாது , தலைநா ளன்ன புகலொடு வழிசிறந்து,பலநா ணிற்பினும் பெறுகுவிர் :] வழி சிறந்து பல நாள் நிற்பினும் - அவ்விடம் நும்நெஞ்சிற்குச் சிறப்பெய்திப் பலநாள் நின்றீராயினும், முடுவல் தந்த பைந்நிணம் தடியொடு -பெண்நாய் கடித்துக் கொண்டு வந்த பசிய நிணத்தையுடையதசைகளோடே, நெடு வெள் நெல்லின் அரிசி முட்டாது - நெடிய வெள்ளிய நெல்லின் அரிசியும்முட்டுப்படாமல், தலைநாள் அன்ன புகலொடு பெறுகுவிர் -முதல் நாட்போன்ற விருப்பத்தோடே பெறுகுவிர் ; 566 - 8. [ நில்லாது, செல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தென, மெல்லெனக் கூறி விடுப்பின் :] நில்லாது எம் தொல் பதிபெயர்ந்து செல்வேம் தில்ல என மெல்லென கூறி விடுப்பின்
|