581 - 3. மலை நீர் வென்று எழு கொடியில் தோன்றும்1குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே - மலையினின்றும் விழுகின்ற அருவிகள்வென்றுயர்கின்ற கொடிகள்போலத்தோன்றும் மலைகள்சூழ்ந்தபரப்பினையுடைய நாட்டிற்கு உரிமையையுடையோன். விடுப்பிற் (568) சென்றோரும்பல் (540) நாடுகிழவோன் (583) தன் கையிடத்துண்டாகிய (577) மழைசுரந்தன்ன இயல்பாகிய கொடைத்தொழிலாலே (580) வளம்பிழைப்பறியாதபடி (578) நிதியத்தோடே (575) தேர் (571) வேழம் (572) நிரை (573) புரவி (574) இவையனைத்தும் (575) உயர்ந்தவன் தாமரை மலைய விறலியர் (569) இழையணியத் (575) உயர்ந்தவன் தாமரை மலைய விறலியர் (569) இழையணியத் (570) தலைநாளிலே பரிசிலாக (581) நல்கி ( 580) விடுக்கும் (581) என முடிக்க. இதனால், வீயாதுசுரக்குமவன் நாண்மகிழிருக்கை (76)கூறினார். கலப்பையிராய் (13) ஒழுகிச் (20) சுற்ற (46) இருந்த (49) தலைவ (50) , யாறு கடற்படர்ந்தாங்கு (52) யாம் அவனைக்கருதிச்சென்று பரிசில் பெற்று வருகின்றேம் ; நீயிரும் (53) நன்னற்படர்ந்த கொள்கையொடு (64) சேறிராயின் (65), எற்றாக்குறுதலின் (66) எதிர்ந்தபொழுதையும் (65) புள்ளையும்உடையிரா யிருந்தனிர் (66) ; இனி யாற்றினதளவும் புலமும் (67) வல்சியும் (68) மலையும் சோலையும் கானமும் (69) ஈகைமாரியும் (72) ஆற்றலும் (73) இருக்கையும் (76) சுற்றத்தொழுக்கமும் (80) கடவுளதியற்கையும் (83) அவன் சிறப்பும் (85) தொல்லோர் வரவும் (89) மூதூர்மாலையும் (93) இருக்கும்படி கேட்பாயாக ; அவற்றுள் இனி வேளை நீ முன்னிய திசையைக்கேள் (94) ; பெட்டாங்குலாகப் பலவு (144) ஈன்றாகவெண்ணிய இம் மிகுவளம் பழுநியவைப்பாலே (95) புதுவதுவந்தன்று ; அவ்வழியின்பண்பு இத்தன்மைத்து (96) ; அவற்றைக்கண்டு கானவர் (155) சிறுகுடிப்படின் (156) ஒக்கலொடும் பதமிகப்பெறுகுவிர் (157) ; அசைஇ அன்று அற்சேர்ந்து அவண் அல்கிப் (158) போகிப் (160) பாக்கமெய்தி (162) விறல்வேள் வயிரிய மெனிற் (188) ; ஆண்டுத் தேக்கட்டேறலைப் (171) பருகி நறவைமகிழ்ந்து (172) அனந்தல்தீர (173) மகமுறைதடுப்ப மனைதொறும் (185) தாரத்தோடே (170) வல்சியைப் (183) பெறுகுவிர் (185) ; பெற்றால் பரிசில் மறப்ப நீடலுமுரியிர் (187) ; அங்ஙனம் நீட்டிப்பிற் பனித்தலுமுரியிர் (191) ; ஆதலால் பலநாணில்லாது நாடுபடர்மின் (192) ; படரும் பொழுது அவ்வாறு (195) அரும்பொறி (194)உடையவாகையினாலே
1 குன்றுசூழிருக்கையென்றது பல்குன்றக்கோட்டத்தை ; இது தொண்டைமண்டலத்துள்ள 24 கோட்டங்களுள் ஒன்று.
|