1 - திருமுருகாற்றுப்படை | கோழி யோங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென் றேத்திப் பலருடன் | 40 | சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச் சூரர மகளி ராடுஞ் சோலை மந்தியு மறியா மரன்பயி லடுக்கத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தட் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் | 45 | பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச் சூர்முத றடிந்த சுடரிலை நெடுவே லுலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற் |
38. வென்றடு விறல்: "வென்றடு விறற்களம்" (முருகு. 55) கோழிக்கொடி: முருகு. 219. 38-9. கொடியை வாழ்த்தல் : "கொடிபாடித் தேர்பாடி" (முத்.), "பாம்புண் பறவைக் கொடிபோல வோங்குக ......... கொடி" (பு. வெ. 227) 12-41. சூரரமகளிர்க்குரியவை. 43. சுடர்ப்பூங்காந்தள்: "தீயி னன்ன வொண்செங் காந்தள்" (மலைபடு. 145) என்பதன் அடிக்குறிப்பைப் பார்க்க. இவ்வடி பெருமையிற் சிறப்பிற்றீராக் குறிப்பின் வந்த உவமத்திற்கு மேற்கோள்; தொல். உவம. சூ.10, பேர். 42-3. மந்தியு மறியா ........... காந்தள் : "கலைகை யற்ற காண்பினெடுவரை" (மலைபடு. 315), "மந்தியு மறியா மரம்பயி லொருசிறைக், குன்றக வெற்பன்" (நற். 194 : 7), "கடுவனு மறியாக் காடிறந் தோளே" (ஐங்.374 : 4), "மந்தியு மறியா மரம்பயி லிறும்பி, னொண்செங் காந்த ளவிழ்ந்த வாங்கண்", "உயர்வரை மருங்கிற் காந்தளஞ் சோலைக், குரங்கறி வாரா மரம்பயி லிறும்பில்" (அகநா. 92 : 8-9, 368 : 8-9) 45."பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்கு" (பரி. 5 : 1); "பாருடைப் பனிக்கடல்" (சீவக. 274); "பார்முதிர் பனிக்கடல்" (பாகவதம், 3. கருத்தமன். 50) 46. "சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்" (அகநா. 59 : 10). 45-6."வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர் கொன்ற, பைம்பூட் சேஎய்" (பெரும்பாண். 457-8) "தடிதல்-வெட்டுதல்; ‘சூர்முதல் ................ நெடுவேல்' என்பதனானுணர்க" (தஞ்சை. 405, உரை)
|