70

பத்துப்பாட்டு

குறமகள் (242) மண்ணி (227) அப்பி உரைத்துப் (228) பட்டுச் சிதறி உடீஇ யாத்துச் சிதறிச் செய்து இரீஇத் தெளித்து நாற்றி வாழ்த்தி எடுத்துப் பாடிக் கறங்காநிற்கத் தூஉய்ப் பரப்பி நிறுத்து ஆற்றுப் படுத்த நகரென வினை முடிக்க.

சாந்திசெய்ய ஆற்றுப்படுத்தாள்.

245. ஆடு களம் சிலம்ப பாடி - அவ்வெறியாடுகின்ற களம் ஆரவாரிப்ப அதற்கு ஏற்பனவற்றைப்பாடி,

245 - 6. [ பலவுடன் கோடுவாய் வைத்து :] கோடு பல உடன் வாய் வைத்து - கொம்புகள் பலவற்றையும் சேரவூதி,

கொடு மணி இயக்கி - கொடிய மணியையும் ஒலிப்பித்து,

247. ஓடா பூட்கை 1பிணிமுகம் வாழ்த்தி - கெடாத வலியினையுடைய பிணிமுகமென்னும் பட்டத்தினையுடைய யானையை வாழ்த்தி,

2பிணிமுகம் - மயிலுமாம்.

248. வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட - காரியங்களை விரும்புவோர் தாங்கள் விரும்பின காரியங்களை விரும்பினாற்போலப் பெற்று நின்று வழிபட,

நகரிலே (244) பாடி வைத்து இயக்கி வாழ்த்தி வழிபட உறைதலு முரியன் (189) என்க.

விழவின் கண்ணும் (220) நிலையின் கண்ணும் (221) கந்துடை நிலையின் கண்ணும் (226) உறைதலுமுரியன் (189) என்க.

249. ஆண்டு ஆண்டு உறைதலும் - களனும் (222) காடும் காவும் துருத்தியும் யாறும் குளனும் வைப்பும் சதுக்கமும் சந்தியும் கடம்பும் மன்றமும் பொதியிலுமாகிய அவ்வவ்விடங்களிலே உறைதலு முரியனென்க.

அறிந்தவாறே - யான் அறிந்தபடியே கூறினேன் ;

250. ஆண்டு ஆண்டு ஆயினும் ஆக - யான் முற்கூறிய அவ்வவ்விடங்களிலேயாயினுமாக,

பிறவிடங்களிலேயாயினுமாக,

உம்மை : ஐயவும்மை.

250 - 51. [ காண்டக, முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்தி :] முந்து நீ கண்டுழி காண் தக முகன் அமர்ந்து ஏத்தி - முற்பட நீ கண்ட பொழுது அழகு தக்கிருக்கும்படி முகம் விரும்பித் துதித்து,


1. பிணிமுகமென்பது பிள்ளையார் பவனிவரும் யானை (வேறுரை). யானையென்றும் சொல்லுப வென்பது புறம் உரையாசிரியர் பரிமேலழகர் நச்சினார்க்கினியர் இவர்களைக் கருதிப் போலும்.

2. "பிணிமுக வூர்தி" (புறநா. 56 : 8), "பிணிமுக மேற்கொண்டு" (சிலப். குன்றக்.) என்பவற்றில் பிணிமுகமென்பதற்கு மயிலென்றே உரையாசிரியர்கள் பொருளெழுதியுள்ளார்கள்.