பத்துப்பாட்டு வயபெடை வெரீஇ பலவுடன் இரிய - பீலியையுடைத்தாகிய இடத்தினையும் மடப்பத்தையுடைத்தாகிய ஒழுக்கத்தினையுமுடைய மயில்களோடே கோழியினுடைய வலியையுடைய பெடை வெருவிப் பலவும் சேரக்கெட, 311 - 4. [ கேழலொ, டிரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன, குரூஉ மயிர் யாக்கைக் குடவாடி யுளியம், பெருங்கல் விடரளைச் செறிய :] கேழலொடு வெளிற்றின் இருபனை புல் சாய் அன்ன குரூஉ மயிர் யாக்கை1குடவாடி உளியம், பெருங்கல் விடர் அளை செறிய - ஆண் பன்றியுடனே உள்ளே வெளிற்றினையுடைத்தாகிய கரிய பனையினது புல்லிய செறும்பையொத்த கரிய நிறத்தையுடைத்தாகிய மயிரினையுடைய உடம்பினையும், வளைந்த அடியினையுமுடைய கரடி பெரிய கல்விண்ட முழைஞ்சிலே சேர, 314 - 5. கரு கோடு ஆமா நல் ஏறு சிலைப்ப - கரிய கொம்பினை யுடைய ஆமாவினுடைய நன்றாகிய ஏறுகள் முழுங்க, 315 - 6. சேண் நின்று இழுமென இழிதரும் அருவி - மலையின் உச்சியினின்றும் இழுமென்னும் ஓசைபடக் குதிக்கும் அருவியையுடைய, 317. பழம் முதிர் சோலை 2மலை கிழவோனே - பழம் முற்றின சோலைகளையுடைய மலைக்கு உரிமையை யுடையோனே. நுடங்கிச் சுமந்து (296) உருட்டிக் (297) கீண்டு (298) சிதையக் (300) கலாவ (301) உதிரப் (302) பனிப்ப (303) வீசித் (304) தழீஇத் தத்துற்றுக் (305) கொழியாத் (306) துமிய (307) உதிரத்தாக்கிச் (308) சாய (309) இரியச் (311) செறியச் (314) சிலைப்ப (315) இழிதரும் அருவி (316) யென முடிக்க. கிழவோனென்ற பெயர், 3உடம்படுபுணர்த்தலாற் கொள்க. கணவன் (6) மார்பினன் (11) சென்னியனாகிய (44) சேயுடைய (61) சேவடி படரும் உள்ளத்தோடே (62) செல்லுஞ்செலவை நீ நயந் தனையாயின் (64) நன்னர் நெஞ்சத்து இன்னசைவாய்ப்ப (65) இன்னே பெறுதி (66); அது பெறுதற்கு அவன் யாண்டுறையுமென்னிற் குன்றமர்ந்துறைதலுமுரியன்; அதுவன்றி (77) அலைவாய்ச்சேறலும் நிலைஇய பண்பு; அதுவன்றி (125) ஆவினன்குடி அசைதலுமுரியன்; அதுவன்றி (176) ஏரகத்துறைதலுமுரியன்; அதுவன்றிக் (189) குன்றுதொறாடலும் நின்றதன் பண்பு; அதுவன்றி (217) விழவின்கண்ணும் (220) நிலையின்கண்ணும் (221) கந்துடை நிலையின்கண்ணும் (226) உறைதலு முரியன் (189); களனும் (222) காடும் (223)முதலியன ஆண்டாண்டுறை
1. குடமுழவுபோன்ற அடி (வேறுரை) 2. நன். சூ. 164 மயிலை. மேற். 3. (பி-ம்). உடம்பொடு புணர்த்தல்.
|