8

பத்துப்பாட்டு

கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
50பெருமுலை யலைக்குங் காதிற் பிணர்மோட்
டுருகெழு செலவி னஞ்சுவரு பேய்மகள்
குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரற்
கண்டொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை
யொண்டொடித் தடக்கையி னேந்தி வெருவர
55வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா
நிணந்தின் வாய டுணங்கை தூங்க
விருபே ருருவி னொருபே ரியாக்கை
யறுவேறு வகையி னஞ்சுவர மண்டி
யவுணர் நல்வல மடங்கக் கவிழிணர்
60 மாமுத றடிந்த மறுவில் கொற்றத்;
தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்

49. கழல்கட் கூகை: கழல்கட் கூகை குழறுகுரற் பாணி"(பதிற். 22 : 36)

49-60. போர்க்களவருணனை.

50-51. மோடேந் தரிவை ........ சார்ந்தோர் துட்கெனும் பேஎ யுருவம்(பெருங். 2. 8 : 106-10)

53. கண்டொட்டுண்ட : "கண்டொட் டுண்டு"(மணி. 6 : 125)

56. "கொள்ளிவாய்ப்பேய் சூழ்ந்து துணங்கையிட் டோடியாடித் தழலு ளெரியும் பிணத்தைவாங்கித் தான்றடிதின்று"(காரைக். திருவாலங்காட்டு. 7). துணங்கை :கலித். 70 : 14.

58.அறுவேறு வகையின்: ‘அறு' என்னும் முதனிலைத்தனிவினை அற்று எனப் பொருள்பட்டு வினையெச்ச மாயிற்றென்பதற்கு மேற்கோள்; இ-கொ. சூ. 66, உரை;நன். வி. சூ. 351.

57-61. "ஈரணிக் கேற்ற வொடியாப் படிவத்துச், சூர்கொன்ற செவ்வேலான்"(கலித். 93-25 : 6), "ஈருருவத் தொருபெருஞ்சூர் மருங்கறுத்த விகல்வெய்யோய்"(தொல். செய். 152, பேர். ந. மேற். செஞ்சுடர்)

59-61. கூடார் மெலியக் கொலைவே னினைந்தான் - அவர் வருந்தும்படி வேல் நினைந்தான் என்றது முருகனை; ‘அவுணர்............... சேஎய்' என்றார்"(சீவக. 2328, ந.)

45-61. மாக்கடன் முன்னி, அணங்குடை யவுண ரேமம் புணர்க்கும், சூருடை முழுமுத றடிந்த பேரிசைக், கடுஞ்சின விறல் வேள்"(பதிற். 11 : 3-6); கடுஞ்சூர் மாமுத றடிந்தறுத்தவே, லடுபோராள", "நீர்நிரந் தேற்ற நிலந்தாங் கழுவத்துச், சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய்"(பரி. 9 : 70-71, 18 : 3-4); "உரவுநீர் மாகொன்ற