1 - திருமுருகாற்றுப்படை | குளித்தவேல் கொற்றவேல் 1சூர்மார்புங் குன்றும் துளைத்தவே லுண்டே துணை. | 4 | இன்ன மொருகா லென திடும்பைக் குன்றுக்கும் கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா-முன்னம் பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட தனிவேலை வாங்கத் தகும். | 5 | 2உன்னை யொழிய வொருவரையு நம்புகிலேன் பின்னை யொருவரையான் பின் செல்லேன் - பன்னிருகைக் கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே. | 6 | அஞ்சு முகந்தோன்றி னாறு முகந்தோன்றும் 3வெஞ்சமரி லஞ்சலென வேறோன்றும் - நெஞ்சில் 4ஒருகா னினைக்கி னிருகாலுந் தோன்றும் முருகாவென் றோதுவார் முன். | 7 | முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே யீசன் மகனே - ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கா லெப்பொழுதும் நம்பியே கைதொழுவே னான். | 8 | காக்கக் 5கடவியநீ காவா திருந்தக்கால் ஆர்க்குப் 6பரமா மறுமுகவா - பூக்கும் கடம்பா 7முருகா கதிர்வேலா நல்ல இடங்கா ணிரங்கா யினி. |
1. "உழல்சூரு மலைமார்பு முடனூடுறப் பொருது" (தக்க. 5) என்பதும், ‘சூரபன்மாவுக்கு மறைவாய் ஓடிவரலான மலையினுடைய மார்பும் சூரபன்மாத்தானும் ஒக்க ஒரேகாலத்திலே ஊடுருவும்படி வேலேறு படப் பொருதருளி' என்ற அதனுரையும் இங்கே கருதத்தக்கன. 2. "உன்னையலா லொருதெய்வ முள்கே னென்றும்" (தே. திருநா.); "உள்ளேன் பிறதெய்வ முன்னையல் லாதெங்க ளுத்தமனே" (திருவா.) 3. (பி-ம்.) ‘வெஞ்ச மரந்தோன்றில் வேறோன்றும்' 4. ஒருகால் - ஒரு முறை; இருகால் - இரண்டு திருவடிகள். 5. (பி-ம்.) ‘கடன்காணீ' 6. (பி-ம்.) ‘பயங்கா ணறுமுகமா' 7. (பி-ம்.) ‘குமரா கதிர்வேலா'
|