பத்துப்பாட்டு | னசையுநர்த் தடையா நன்பெரு வாயி லிசையேன் புக்கென் னிடும்பை தீர வெய்த்த மெய்யே னெய்யே னாகிப் பைத்த பாம்பின் றுத்தி யேய்ப்பக் | 70 | கைக்கச டிருந்தவென் கண்ணகன் றடாரி யிருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர் வெள்ளி முளைத்த நள்ளிருள் விடிய லொன்றியான் பெட்டா வளவையி னொன்றிய கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி | 75 | வேளாண் வாயில் வேட்பக் கூறிக் கண்ணிற் காண நண்ணுவழி யிரீஇப் பருகு வன்ன வருகா நோக்கமோ |
66. "பொருநர்க் காயினும் புலவர்க் காயினும், அருமறை நாவினந்த ணர்க்காயினும் ....... அடையா வாயில்" (சிறுபாண். 203 - 6) ; "நசையுநர்க் கடையா நன்பெரு வாயில்" (கூர்ம. சூரியன்மரபு. 13) 66 - 7. (பி-ம்.) ‘நசையுநர்க் கடையா ...... இசையெனப் புக்கு' நன். சூ. 457,; சூ 458, மயிலை. நன். வி. மேற். 68. நன். சூ. 451. ‘மயிலை. மேற். 69. பைத்த - சோபித்த வென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தக்க. 466, உரை. 72. "விளக்குறு வெள்ளி முளைத்துமுன் றோன்ற" (பெருங். 1. 53 - 81): "வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று" (திருப்பாவை, 13) 73. "ஒன்றியான் பெட்டா வளவை யன்றே" (புறநா. 399 : 29) 70 - 75. "வெள்ளி முளைத்த விடியல் வயல்யாமை, அள்ளகட் டன்ன வரிக்கிணை-வள்ளியோன், முன்கடை தட்டிப் பகடுவாழ் கென்னா முன், என்கடை நீங்கிற் றிடர்" (பு. வெ. 206) 76. "கண்ணிற் காண நண்ணுவழி யிருந்து" (குறுந். 203 : 3) 77. "பருகு வன்ன காத லுள்ளமொடு" (அகநா. 399 : 4); "பருகு காதலிற் பாடி யாடினார்" (சீவக. 1765): "பருகு வன்னநோக்க மொடு" (பெருங். 3. 7 : 80) ; "பருகுவான் போல நாக்கும்", "பருகுவனள் போனோக்கி" (பாகவதம், 4. துருவன்பதம் 35 ; 10.சகடமுதைத்த. 21); "மலர்த்தடங்கண்ணே வாயாப் பருகுவான் போல நோக்கி" (கூர்ம. திருக்கல்யாண. 61); "பருகுவ னன்ன வார்வத்தனாகி" (நன். சூ. 40) "பருகுவார் போலினும்" (குறள். 811) என்பதற்கு இவ்வடி மேற்கோள் ;பரிமேல்.
|