89

2 - பொருநராற்றுப்படை

டுருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ
யீரும் பேனு மிருந்திறைகூடி
80வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த
துன்னற் சிதாஅர் துவர நீக்கி
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்
தரவுரி யன்ன வறுவை நல்கி
மழையென மருளு மகிழ்செய் மாடத்

 


79. (பி-ம்.) ‘இமிர்ந்திறை கூடி'

80. "தொன்றுபடு துளையொடு பருவிழை போகி" (புறநா. 376 : 10)

81. "துன்னற் சிதாஅர் நீக்கி" (பொருந. 154); "சிதாஅருடுக்கை முதாரிப் பாண", "தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி" (புறநா. 138 : 5, 393 : 16)

80 - 81. "அரையது, வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅ, ரோம்பி" (புறநா. 69 : 2 - 4).

79 - 81. "யாழ்ப்பத்தர்ப் புறங்கடுப்ப, இழைவலந்த பஃறுன்னத் திடப்புரைபற்றிப் பிணிவிடா, ஈர்க்குழாத்தோ டிரைகூர்ந்த, பேஎற் பகையென வொன்றென்கோ" (புறநா. 136 : 1 - 5)

82. (பி-ம்) ‘நோக்குநுழை வேலா'

83. ஆடைக்குப் பாம்புரி : "பாப்புரி யன்ன மீக்கொ டானை" (பெருங். 1. 42 : 244) ; "அரவுரி....................... துகிற்கொடி நிகர்ப்பன" (கம்ப. சித்திர. 4); "அரிவை துகினெகி ழல்கு லரவி, னுரிவை விடு படமொத்தாள்" (குலோத். உலா); "குரவ மெல்லரும் பன்னவெங் கூரெயிற் றரவின், உரிவை யன்னவா னுண்டுகில்" (பாகவதம், 10. கோவியர்துகில். 9); "பாழிவா யரவி னுரிநிக ராடை" (இலிங்க. அம்பரீடனை. 56); "பையர வுரியி னன்ன நடைப்படாம்" (திருவிளை. திருமண. 147)

82 - 3. நோக்கு நுழைகல்லா நுண்மைய ...............அறுவை; "கண்ணுழை கல்லா நுண்ணூற் கைவினை, வண்ண வறுவையர்" (மணி. 28 : 53 - 4); "அணங்கு நுண்டுகில் - இழை தெரியாது வருந்தும் நுண்ணிய துகில்" (சீவக. 344, ந.); "கண்கொளாப் பட்டுடுத்தாள்" ( சீவக. 2444); "நோக்குநுழை கல்லாச் செய்ய, அணங்கரவி னுரியன்ன பட்டாடையொடு" (வாயுசங்கிதை, கிரியா. 13)

84. "மலையென மழையென மாட மோங்கி" (மலைபடு. 484); ந : "சேறுசெய் மாரியி னளிக்குநின், சாறுபடு திருவி னனைமகி ழானே" பதிற். 65 : 16 - 7. (பெருங். 3. 16 : 27)