9

1 - திருமுருகாற்றுப்படை

சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு 
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையுஞ்
செலவுநீ நயந்தனை யாயிற் பலவுட
65னன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப
வின்னே பெறுதிநீ முன்னிய வினையே
செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி

வென்வேலான்", "மாகடல் கலக்குற மாகொன்ற மடங்காப்போர், வேல்வல்லான்" (கலித். 27 : 15-6, 104 : 13-4); "உரவுநீர் மாகொன்ற வேல்", பாரிரும் பௌவத்தி னுள்புக்குப் பண்டொருநாட், சூர்மாத் தடிந்த சுடரிலைய வெள்வேலே" (சிலப். குன்றக். பாட்டுமடை, ‘உரையினி'); "அகறிரைப் பரப்பிற் சடையசைத் தலையாது, கீழிணர் நின்ற மேற்பகை மாவின், ஓருட லிரண்டு கூறுபட விடுத்த.......... அமையாவென்றி யரத்த நெடுவேலோய்", "கட்டுடைச் சூருடல் காமங்கொண்டு, பற்றியுட்புகுந்து பசுங்கடல் கண்டு, மாவொடுங் கொன்றமணி நெடுந் திருவேல்", "கடன்மாக் கொன்ற தீப்படர் நெடுவேல்", "கருங்கடல் குடித்தலிற் பெருந்தழற் கொழுந்து, மாவுயிர் வௌவலிற் றீவிழிக் கூற்றும்......... ஆகிய மணிவேற் சேவலங் கொடியோன்", "மணி திரைக் கடலுண் மாவெனக் கவிழ்ந்த, களவுடல் பிளந்த வொளிகெழு திருவேற், பணிப்பகை யூர்தி", "மாவெனக் கவிழ்ந்த மறிகட லொன்றும், கடுங்கனற் பூழி படும்படி நோக்கிய, தாரையெட் டுடைய கூரிலை நெடுவேற், காற்படைக் கொடியினன்", "மேல்கடற் கவிழ்முகப் பொரியுடன் மாவு, நெடுங்கடற் பரப்பு மடுந்தொழி லரக்கரு, மென்னுளத் திருளு மிடைபுகுந் துடைத்த, மந்திரத் திருவேன் மறங்கெழு மயிலோன்", நீர்மாக் கொன்ற சேயோன்", "பெருங்கள விணர்தந் தவைகீழ்க் குலவிய, விடமாக் கொன்ற நெடுவேற் குளவன்" (கல்.); "கருங்கடலுண் மாத்தடிந்தான்" (பு. வெ. 103)

62. செம்மலுள்ளம்: "செம்ம லுள்ளமொடு செல்குவி ராயின்" (சிறுபாண். 145), "செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு" (குறுந். 270 : 5; 275 : 5), "அருந்தொழின் முடித்த செம்ம லுள்ளமொடு" (அகநா. 184 : 5)

63. ‘புலம்புரிந்துறையும்' என்பதும் பாடம்.

65.‘இன்னிசை' என்பதும் பாடம்.

66.இன்னே:குறுந். 287 : 2.

67. "ஆரெயில் கொளக்கொள, நாடோ றெடுத்த நலம்பெறு புனை கொடி" (மதுரைக். 367-8); "வென்றெழு கொடியொடு" (நெடுநல். 87); "மலைநீர், வென்றெழு கொடியிற் றோன்றும்" (மலைபடு. 581-2);