90

பத்துப்பாட்டு

85திழையணி வனப்பி னின்னகை மகளிர்
போக்கில் பொலங்கல நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட 
வார வுண்டு பேரஞர் போக்கிச்
செருக்கொடு நின்ற காலை மற்றவன்
90றிருக்கிளர் கோயி லொருசிறைத் தங்கித்
தவஞ்செய் மாக்க டம்முடம் பிடாஅ
ததன்பய மெய்திய வளவை மான
வாறுசெல் வருத்த மகல நீக்கி 
யனந்தர் நடுக்க மல்ல தியாவது
95மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து
மாலை யன்னதோர் புன்மையுங் காலைக்
கண்டோர் மருளும் வண்டுசூழ் நிலையுங்

 


85. "இழையணி சிறப்பிற் பழையோள் குழவி" (முருகு. 259) 

இன்னகை மகளிர் : "இன்னகை யாயமோ டிருந்தோற் குறுகி" (சிறுபாண். 220); "நகைத்துணை யாய மெதிர் கொள" (பெருங். 1. 48 : 70)

86 - 8. பகரவுகரம் இறந்தகால வினையெச்சமாக வருமென்பதற்கு இவ்வடிகள் மேற்கோள்; தொல். வினை. சூ. 31, ந; இ - வி. சூ. 246.

85 - 8. "இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய, மணங்கமழ் தேறன் மடுப்ப நாளு, மகிழ்ந்தினி துறைமதி பெரும" (மதுரைக். 779 - 81); "தண்கமழ் தேறல், பொன்செய் புனைகலத் தேந்தி நாளு, மொண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து" (புறநா. 56 : 18 - 20); பெருங். 2. 14 : 60 - 61.

91 - 2. "இடம்படு புகழ்ச்சனகர் கோனினிது பேண ..............., உடம்பொடு துறக்கநக ருற்றவரை யொத்தார்", "இறைவன் சொல்லெனு மின்னற வருந்தினர் யாரும் ................ , உறையும் விண்ணக முடலொடு மெய்தின ரொத்தார்", "இம்மையே மறுமை தானு நல்கினை யிசையோ டென்றாள்" (கம்ப. கடிமணப். 1, மந்திர. 75, உருக்காட்டு. 71)

94. "துழந்தடு கள்ளின் றோப்பியுண் டயர்ந்து, பழஞ்செருக் குற்ற வனந்தர்ப் பாணியும்" (மணி. 7 : 71 - 2); "அரிய லார்ந்த வனந்தர்" (தணிகைப். நாடு. 100)

96 - 7. காலைக்கண்டோர் மருளும் ........... நிலை : பண்டறி வாரா வுருவோடு" (புறநா. 376 : 9); "நின்னை வருத லறிந்தனர் யாரே"