2 - பொருநராற்றுப்படை | கனவென மருண்டவென் னெஞ்சே மாப்ப வல்லஞர் பொத்திய மனமகிழ் சிறப்பக் | 100 | கல்லா விளைஞர் சொல்லிக் காட்டக் கதுமெனக் கரைந்து வம்மெனக் கூஉ யதன் முறை கழிப்பிய பின்றைப் பதனறிந்து துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின் பராஅரை வேவை பருகெனத் தண்டிக் | 105 | காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை யூழி னூழின் வாய்வெய் தொற்றி யவையவை முனிகுவ மெனினே சுவைய வேறுபல் லுருவின் விரகுதந் திரீஇ மண்ணமை முழவின் பண்ணமை சீறியா | 110 | ழொண்ணுதல் விறலியர் பாணி தூங்க மகிழ்ப்பதம் பன்னாட் கழிப்பி யொருநா ளவிழ்ப்பதங் கொள்கென் றிரப்ப முகிழ்த்தகை முரவை போகிய முரியா வரிசி விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல் | 115 | பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப வயின்ற காலைப் பயின்றினி திருந்து |
(புறநா. 138 : 11) என்பதற்கு, ‘நின்னை அறிவாரும் அறியாத தன்மையையாவை' என்றெழுதிய விசேடவுரை இங்கே அறிதற்பாலது. 98. "கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப, நனவி னல்கியோ னசைசா றோன்றல்", " கனவென மருள வல்லே நனவி, னல்கி யோனே நசைசா றோன்றல் " (புறநா. 377 : 19 - 20, 387 : 26 - 7) 101. "வம்மெனக் கூஉய்" (மணி. 19 : 98) 105. காழிற் சுட்ட கோழூன் : "காழ்க்கோத்த சூட்டென்கோ " (யா. வி. மேற்.) 107 - 8. "ஊனு மூணு முனையி னினிதெனப், பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவு, மளவுபு கலந்து மெல்லிது பருகி" (புறநா. 331 : 1 - 3) 115. ‘ பால்வறைக்கருனை ' எனவும் படிப்பதுண்டு. 113 - 5. "முரவை போகிய முரிவில்வான் மூரல்பால் வறையல், கருனை" (திருவிளை. குண்டோதரனுக்கு. 14)
|