92

பத்துப்பாட்டு

கொல்லை யுழுகொழு வேய்ப்பப் பல்லே
யெல்லையு மிரவு மூன்றின்று மழுங்கி
யுயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனிந் தொருநாட்
120செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய
செல்வ சேறுமெந் தொல்பதிப் பெயர்ந்தென
மெல்லெனக் கிளந்தன மாக வல்லே
யகறி ரோவெம் மாயம் விட்டெனச்
சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு
125துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு
பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத்
தன்னறி யளவையிற் றரத்தர யானு
மென்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண்
டின்மை தீர வந்தனென் வென்வே
130லுருவப் பஃறே ரிளையோன் சிறுவன்

 


117 - 8. கொல்லை யுழுகொழு வேய்ப்ப ............. மழுங்கி : "தேமுரம் புழுவார் நாஞ்சிற் கொழுவெனத் தேய்ந்து" (திருக்குற். கவுற்சனச். 28)

121 - 2. "செல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தென. மெல்லெனக் கூறி விடுப்பின்" (மலைபடு. 567 - 8)

125. (பி-ம்.) ‘துடிபுரை யடிய'

"துடியடிக்கயந்தலை" (கலித். 11 : 8); "துடியடிக் குழவிய" (புறநா. 69 : 26)

125 - 6. "இருபெயர்ப் பேராயமொ, டிலங்குமருப்பிற் களிறு கொடுத்தும்" (மதுரைக். 101 - 2)

126 - 7. யானை கொடுக்கப்படுதலைப் புறநானூறு, 129, 130, 131, 135, 151 -ஆம் பாட்டுக்கள் முதலியவற்றாலுணர்க; "குன்றாகியபொன்னும் வேழக் குழாமுங் கொடைபுகழ்ந்து, சென்றார் முகக்கும்" (தஞ்சை. 149)

128. "என்னறி யளவையி னொண்ணுதல் கொண்ட" (பெருங். 1. 36 : 364)

129. (பி-ம்.) ‘வெல்வேல்'

119 - 29. பரிசிலன் யான் போகல் வேண்டுமெனக்கூறி, விடுத்தபின் தலைவன் தந்த வளனை உயர்த்துக் கூறியதற்கு இது மேற்கோள்; தொல். புறத். சூ. 36, ந.

130. ‘உருவப்பஃறேரிளஞ்சேட்சென்னி அழுந்தூர் வேளிடை மகட்கோடலும், அவன் மகனாகிய கரிகாற்பெருவளத்தான் நாங்கூர் வேளிடை மகட்கோடலும்' (தொல். அகத். சூ. 30, ந.)