பத்துப்பாட்டு 145 | மோங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த விருபெரு வேந்தரு மொருகளத் தவிய வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட் கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன் றாணிழன் மருங்கி லணுகுபு குறுகித் | 150 | தொழுதுமுன் னிற்குவி ராயிற் பழுதின் றீற்றா விருப்பிற் போற்றுபு நோக்கிநுங் கையது கேளா வளவை யொய்யெனப் |
145. "ஓங்கிருஞ் சென்னி மேம்பட மலைய" (சிலப். 26 : 220) 147. (பி-ம்.) ‘வெண்ணிற் றாக்கிய' 146 - 7. வெண்ணிப் போர்: அகநா. 55 : 10 - 12, 125 : 16 - 22, 246 : 8 - 14. 148. "கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன்" (சிறுபாண். 65) 137 - 48. "முலைமுத றுறந்த வன்றே மூரித்தா ளாளி யானைத், தலைநிலம் புரள வெண்கோ டுண்டதே போன்று தன்கைச், சிலையிடம் பிடித்த ஞான்றே தெவ்வரைச் செகுத்த நம்பி, நிலவுமிழ் குடையி னீழற் றுஞ்சுக வைய மென்பார்" (சீவக. 2554) 149. (பி-ம்.) ‘மருங்கி னணுகுபு' 151. "ஆன்கணம், கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதா" (குறிஞ்சிப். 217 - 8); "கறவை கன்றுவயிற் படர" (குறுந். 108 : 2); "தாவா விருப்பொடு கன்றியாத் துழிச்செல்லு, மாபோற் படர்தக நாம்", "கறவைதம் பதிவயிற், கன்றமர் விருப்பொடு மன்றுநிறை புகுதர" (கலித். 81 : 36 - 7, 119 : 9 - 10); "பதவுமேய லருந்து மதவுநடை நல்லான், வீங்குமாண் செருத்த றீம்பால் பிலிற்றக், கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரும்", மதவுநடைத், தாம்பசை குழவி வீங்குசுரை மடியக், கனையலங் குரல காற்பரி பயிற்றிப், படுமணி மிடற்ற பயநிரையாயம் .............. தூங்க" (அகநா. 14 : 9 - 11, 54 : 6 - 11); "குவளை மேய்ந்த குடக்கட் சேதா, முலைபொழி தீம்பா லெழுதுக ளவிப்ப, கன்று நினை குரல மன்றுவழிப் படர" (மணி. 5 : 130 - 32); "கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே" (திருவா.); "கன்றுகாண் கறவையிற் சென்றவட் பொருந்தி", "தனிக்கன் றுள்ளிய புனிற்றாப் போல, விரைவிற் செல்லும் விருப்பின னாகி" (பெருங். 2. 10 : 41, 18 : 10 - 11); "கன்றுகாண் கறவையிற் கசிந்து போற்றினாள்" (பாகவதம், 10. திருவவதார. 58) (பி-ம்.) "போற்றுவனனோக்கி" 152. ஒய்யென : முல்லை. 83. (பி-ம்.) ‘கையது கொள்ளா'
|