95

2 - பொருநராற்றுப்படை

பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னற் சிதாஅர் நீக்கித் தூய
155கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப்
பெறலருங் கலத்திற் பெட்டாங் குண்கெனப்
பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தா
வைகல் வைகல் கைகவி பருகி
யெரியகைந் தன்ன வேடி றாமரை
160சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி
நூலின் வலவா நுணங்கரின் மாலை


 


153. (பி-ம்.) ‘மாசொடு மிடைந்த'

154. பொருந. 81, அடிக்குறிப்பைப் பார்க்க.

153 - 4. "பாசி யன்ன சிதர்வை" (பெரும்பாண். 468)

153 - 7. "என்னரை, முதுநீர்ப் பாசி யன்ன வுடைகளைந்து, திருமல ரன்ன புதுமடிக் கொளீஇ, மகிழ்தரன் மரபின் மட்டே யன்றியும், அமிழ்தன மரபி னூன்றுவை யடிசில், வெள்ளி வெண்கலத் தூட்டல்", "ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி, வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை, நுண்ணூற் கலிங்க முடீஇ யுண்மெனத், தேட்கடுப் பன்ன நாட்படு தேறல், கோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ, ஊண்முறை யீத்த லன்றியுங் கோன்முறை, விருந்திறை நல்கி யோனே" (புறநா. 390 : 13 - 8, 392 : 13 - 9)

159. "எரியகைந் தன்ன தாமரை" (அகநா. 106 : 1, 116 : 1)

160. சுரியிரும்பித்தை : "சுரியிரும்பித்தை சூழ்ந்துபுறந்தாழ்ந்த, விரிபூ மாலை" (மணி. 22 : 149 - 50)

159 - 60. பாணன் பொற்பூச் சூடல் : "பாணர் தாமரை மலையவும்", "அழல்புரிந்த வடர்தாமரை, யைதடர்ந்த நூற்பெய்து, புனைவினைப் பொலிந்த பொலனறுந் தெரியல், பாறுமயி ரிருந்தலை பொலியச் சூடிப், பாண்முற் றுகநின் னாண்மகி ழிருக்கை", "ஆடுவண் டிமிராத் தாமரை, சூடா யாத லதனினு மிலையே", "ஒன்னார் யானை யோடைப் பொன் கொண்டு, பாணர் சென்னி பொலியத் தைஇ, வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்" (புறநா. 12 : 1, 29 : 1 - 5, 69 : 20 - 21, 126 : 1 - 3); "பூப்புனையு, நற்குலத்துட் டோன்றிய நல்லிசையாழ்த் தொல்புல வீர்", "இன்றொடை நல்லிசை யாழ்ப்பாண வெம்மைப்போற், கன்றுடை வேழத்த கான்கடந்து - சென்றடையிற், காமரு சாயலாள் கேள்வன் கய மலராத், தாமரை சென்னி தரும்" (பு. வெ. 31, 216); "பாடினர்க்கு, வற்றாத மானத வாவியில் வாடாத, பொற்றா மரையே புனைகென்றாள்" (இராச. உலா)