பத்துப்பாட்டு | வாலொளி முத்தமொடு பாடினி யணியக் கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தே ரூட்டுளை துயல்வர வோரி நுடங்கப் | 165 | பால்புரை புரவி நால்குடன் பூட்டிக் காலி னேழடிப் பின்சென்று கோலின் றாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு பேர்யாழ் முறையுளிக் கழிப்பி நீர்வாய்த |
159 - 62. பாணன் பொற்றாமரை பெறுதலும் பாடினி மாலை முதலியன பெறுதலும்: "ஆடுவண் டிமிரா வழலவிர் தாமரை, நீடிரும் பித்தை பொலியச் சூட்டி .................. புனையிருங் கதுப்பகம் பொலியப் பொன்னின், தொடையமை மாலை விறலியர் மலைய" (பெரும்பாண். 481 - 6); "தலைவன் றாமரை மலைய விறலியர், சீர்கெழு சிறப்பின் விளங்கிழை யணிய" (மலைபடு. 569 - 70); "பைம்பொற் றாமரை பாணர்ச் சூட்டி, யொண்ணுதல் விறலியர்க் காரம் பூட்டி" (பதிற். 48 : 1 - 2); "மறம்பாடிய பாடினியும்மே, யேருடைய விழுக்கழஞ்சிற், சீருடைய விழைபெற்றிசினே, யிழைபெற்ற பாடினிக்குக், குரல்புணர்ச்சீர்க்கொளைவல் பாண்மகனும்மே, எனவாங், கொள்ளழல் புரிந்த தாமரை, வெள்ளி நாராற் பூப்பெற்றிசினே", "பாடினி மாலை யணிய, வாடாத் தாமரை சூட்டுவ னினக்கே", "வாடா மாலை படினி யணியப், பாணன் சென்னிக் கேணி பூவா, வெரிமரு டாமரைப் பெருமலர் தயங்க" (புறநா. 11 : 11 - 7, 319 : 14 - 5, 364 : 1 - 3) 163. "மருப்பிய லூர்தி" (பெருங். 1. 38 : 11); "கோட்டினிற் புரி கொடுஞ்சியந்தேர்", "யானைக் கோட்டினி லியற்று திண்டேர்" (பாகவதம், 1. தன்மபுத்தினரசு. 18 ; 10. திருவவதார. 18) ஐந்தாம் வேற்றுமை ஆக்கப்பொருளில் வந்ததற்கு இவ்வடி மேற்கோள் (தொல். வேற்றுமையியல், சூ. 17, ந.; இ. வி. சூ. 202, உரை); கருவிப் பொருளில் வந்ததற்கு மேற்கோள்;நன். 293, மயிலை. 165. "வளைகண் டன்ன வாலுளைப் புரவி, துணைபுணர் தொழில் நால்குடன் பூட்டி" (பெரும்பாண். 488 - 9) "நால்கு பண்ணினர் நால்வரு மேறினார்" என்ற அடியுரையில் நால்கென்பதற்கு மேற்கோள்: சீவக. 1774, ந. 167. (பி-ம்.) ‘களைதந் தேறென் றேற்றி' 168. (பி-ம்.) ‘முறையுளி கழிப்பி'
|