97

2 - பொருநராற்றுப்படை

தண்பணை தழீஇய தளரா விருக்கை
170நன்பல் லூர நாட்டொடு நன்பல்
வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை
வெருவரு செலவின் வெகுளி வேழந்
தரவிடைத் தங்கலோ விலனே வரவிடைப்
பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தித் தெற்றெனச்
175செலவுகடைக் கூட்டுதி ராயிற் பலபுலந்து
நில்லா வுலகத்து நிலைமை தூக்கிச்
செல்கென விடுக்குவ னல்ல னொல்லெனத்
திரைபிறழிய விரும்பௌவத்துக்
கரைசூழ்ந்த வகன் கிடக்கை
180மாமாவின் வயின்வயினெற்
றாழ்தாழைத் தண்டண்டலைக்
கூடுகெழீ இய குடிவயினாற

 


169. மு. "தண்பணை தழீஇய, தளரா விருக்கை" (சிறுபாண். 78;பெரும்பாண். 242)

"தண்பணை தழீஇய, சயந்தியம் பெரும்பதி" (பெருங். 2. 10 : 3 - 4)

172. (பி-ம்.) ‘வெருவருஞ் செலவின்'

171 - 2. "நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப், பறையறைந் தல்லது செல்லற்க" (கலித். 56 : 32 - 3); "தெண்கணை முன்னர்க் களிற்றி னியலி" (புறநா. 79 : 3); "பாகும் பறையும் ............... அலவுற்று விளிப்ப", "பணையெழுந் தார்ப்ப, மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு, நீல யானை மேலோ ரின்றிக் காமர் செங்கை நீட்டி" (மணி. 4 : 41 - 2, 19 : 18 - 21); "பறைநிறை கொல்யானை", "அறைபறை யானை" (முத்); "முரசதிர்ந் தானைமுன் னோட முன்பணிந் தன்பர்க ளேத்த" (தே. ஆரூர்.) "பறைவன் களிற்று" (வி. பா. சூதுபோர். 225)

176. (பி-ம்.) ‘நிலைமை தூக்கி'

மு. "நில்லா வுலகத்து நிலைமை தூக்கி" (பெரும்பாண். 466)

180. (பி-ம்.) ‘வயின் வயினின்'

181. வெண்பாவுரிச்சீரால் தூங்கலோசை பிறந்ததற்கு இவ்வடி மேற்கோள்; (தொல். செய். சூ. 22, பேர்.)

182. (பி-ம்.) ‘கூடு குழீஇய'