98

பத்துப்பாட்டு

செஞ்சோற்ற பலிமாந்திய
கருங்காக்கை கவவுமுனையின
185மனைநொச்சி நிழலாங்க
ணீற்றியாமைதன் பார்ப்போம்பவு
மிளையோர் வண்ட லயரவு முதியோ
ரவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவு
முடக்காஞ்சிச் செம்மருதின்
td>
190மடக்கண்ண மயிலாலப்
பைம்பாகற் பழந்துணரிய
செஞ்சுளைய கனிமாந்தி
யறைக்கரும்பி னரிநெல்லி
னினக்களம ரிசைபெருக
195வறளடும்பி னிவர்பகன்றைத்
தளிர்ப்புன்கின் றாழ்காவி
னைஞாழலொடு மரங்குழீஇய
வவண்முனையி னகன்றுமாறி
யவிழ்தளவி னகன்றோன்றி
200நகுமுல்லை யுகுதேறுவீப்
பொற்கொன்றை மணிக்காயா
்புறவி னடைமுனையிற்


 


183 - 4. காக்கை பலியை உண்ணல்: "வெண்ணெல் வெஞ்சோ, றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி, ............ விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே" (குறுந். 210 : 3 - 6); "வரக்கரைந்தா, லுணங்கலஞ் சாதுண்ண லாமொண் ணிணப்பலி யோக்குவன்மாக், குணங்களஞ் சாற்பொலி யுந்நல சேட்டைக் குலக்கொடியே" (திருச்சிற். 235) 

188. (பி-ம்.) ‘பகைமுரண் சொலவும்'

190-92. மயில் பாகற்பழத்தை யுண்ணல் : "பாக லார்க்கைப் பறைகட் பீலித், தோகை", "பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇக், கான மஞ்ஞைக் கமஞ்சூன் மாப்பெடை, யயிரியாற் றடைகரை வயிரி னரலும்" (அகநா. 15 : 4 - 5, 177 : 9 - 11)

"பாகல் - பலா; ........... ‘பைம்பாகற் ......... மாந்தி' எனவுஞ் சொன்னார் பாட்டினும்" (சிலப். 16 : 22 - 8, அடியார்.)

201. மணிக்காயா. "மணியெனத் தேம்படு காயா" (ஐங். 420); "மணிபுரை யுருவின காயாவும்" (கலித். 101 : 5)

202. (பி-ம்.) ‘முணையின்'