பக்கம் எண் :


689

அருஞ்சொல்பொருள் அகரவரிசை


அருஞ்சொல்
பாட்டு
இருவி - தினைத்தாள்
இரைநசைஇ - இரைவிரும்பி
இல்லம் - தேற்றா மரம்
இவர்தல் - படர்ந்தேறுதல்
இவர்ந்து - ஏறிவந்த
இவர்ந்து - எழுந்து
இழிதல் - இறங்குதல்
இழைஅணி - கலன் அணிந்த
இளைப்படல் - காவற்படல்
இறப்பின் - செல்லின்
இறுகுபுல் - காய்ந்தபுல்
இறுத்தல் - பொய்தொழித்தல்
இறுத்தன்று - தங்கியது
இறும்பு - சிறு காடு, மலை
இறும்பு - சிறுமலை
இறை - சிறிது
இறை - கூரை
இறை - முன்கை
இறைகூடிய - நிலைமிகுதலைக் கொண்ட
இறைகொள்ளல் - தங்குதல்
இற்கடை - இல்லின்கண்
இற்றி - இத்திமரம், இச்சி
இனியபடுதல் - இன்னே வருவர் என்னும் வாய்ச்சொல் உண்டாதல் முதலிய நன்னிமித்தம் படுதல்
இனன் இரிந்து - கூட்டத்தினின்று பின்வாங்கி
இன்மை - வறுமை
இன்ன ஆகுதல் - இத்தன்மையை யுடையையாயிருத்தல்
ஈண்டல - ஈண்டுதலையுடைய நீர்
ஈர்மட்செய்கை - ஈரங்காயாத பசுமட்கலம்
ஈர்மலர் - மெல்லியமலர்
ஈற்றா - கன்றையீன்ற பசு
ஈனாப்பாவை - தான் பெறாது கோரையாலே செய்துவைத்துத் தன் மகவென முறைமை பாராட்டும் பாவை
உகத்தல் - உயரப்போதல்
உகிர்நிமிரல் மாந்தி - உகிர் போன்ற சோற்றைத் தின்று