|
|
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண், |
|
பிணி முதல் அரைய பெருங் கல் வாழைக் |
|
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும் |
|
நல் மலை நாடனை நயவா, யாம், அவன் |
5 |
நனி பேர் அன்பின், நின் குரல் ஓப்பி, |
|
நின் புறங்காத்தலும் காண்போய், நீ? என் |
|
தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய, |
|
பலி பெறு கடவுட் பேணி, கலி சிறந்து, |
|
நுடங்கு நிலைப் பறவை உடங்கு பீள் கவரும்; |
10 |
தோடு இடம் கோடாய், கிளர்ந்து, |
|
நீடினை விளைமோ! வாழிய, தினையே! |
உரை |
|
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-மதுரைப் பெருமருதிள நாகனார்
|
|
''உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி, |
|
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம், |
|
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின அல்லது, |
|
அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்'' என, |
5 |
வலியா நெஞ்சம் வலிப்ப, சூழ்ந்த |
|
வினை இடை விலங்கல போலும்-புனை சுவர்ப் |
|
பாவை அன்ன பழிதீர் காட்சி, |
|
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல், மை கூர்ந்து |
|
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், |
10 |
முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய் |
|
நல் நாப் புரையும் சீறடி, |
|
பொம்மல் ஓதி, புனைஇழை குணனே! |
உரை |
|
''பொருள்வயிற் பிரியும்'' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.-அம்மெய்யன் நாகனார்
|
|
புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும், |
|
பள்ளி யானையின் வெய்ய உயிரினை, |
|
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து |
|
எனவ கேளாய், நினையினை, நீ நனி: |
5 |
உள்ளினும் பனிக்கும்-ஒள் இழைக் குறுமகள், |
|
பேர் இசை உருமொடு மாரி முற்றிய, |
|
பல் குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி, |
|
பலவு உறு குன்றம் போல, |
|
பெருங் கவின் எய்திய அருங் காப்பினளே. |
உரை |
|
செறிப்பு அறிவிறீஇ வரைவு கடாயது.-கபிலர்
|
|
வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும், |
|
குன்று ஓங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும், |
|
துனி இல் நல்மொழி இனிய கூறியும், |
|
சொல் எதிர் பெறாஅய் உயங்கி, மெல்லச் |
5 |
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப! |
|
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் |
|
அயினி மா இன்று அருந்த, நீலக் |
|
கணம் நாறு பெருந் தொடை புரளும் மார்பின் |
|
துணை இலை தமியை சேக்குவை அல்லை- |
10 |
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி, |
|
வானம் வேண்டா உழவின் எம் |
|
கானல்அம் சிறு குடிச் சேந்தனை செலினே |
உரை |
|
தோழி படைத்து மொழிந்தது.-உலோச்சனார்
|
|
கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே; |
|
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி, |
|
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்; |
|
வயக் களிறு பொருத வாள் வரி உழுவை |
5 |
கல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ!- |
|
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர் |
|
வாரார்ஆயினோ நன்றுமன்தில்ல- |
|
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப் |
|
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள், |
10 |
திருமணி அரவுத் தேர்ந்து உழல, |
|
உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே! |
உரை |
|
ஆறு பார்த்து உற்றது.-ஆலம்பேரி சாத்தனார்
|
|
நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி, |
|
அல்கு பெரு நலத்து, அமர்த்த கண்ணை; |
|
காடே, நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த, |
|
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே; |
5 |
இந் நிலை தவிர்ந்தனம் செலவே: வைந் நுதிக் |
|
களவுடன் கமழ, பிடவுத் தளை அவிழ, |
|
கார் பெயல் செய்த காமர் காலை, |
|
மடப் பிணை தழீஇய மா எருத்து இரலை |
|
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த |
10 |
கண் கவர் வரி நிழல் வதியும் |
|
தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே. |
உரை |
|
''பொருள்வயிற் பிரிந்தான்'' என்று ஆற்றாளாகிய தலைமகளைத் தலைமகன் ஆற்றியது. -பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ, |
|
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின், |
|
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டு |
|
இலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன்- |
5 |
அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப் |
|
பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம் |
|
நல் மலை நாட!-நயந்தனை அருளாய், |
|
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக் |
|
கடு மா வழங்குதல் அறிந்தும், |
10 |
நடு நாள் வருதி; நோகோ யானே. |
உரை |
|
தோழி தலைமகனது ஏதம் சொல்லி வரைவு கடாயது.-வண்ணக்கன் சோருமருங்குமரனார்
|
|
பல் பூங் கானல் பகற்குறி மரீஇ |
|
செல்வல்-கொண்க!-செறித்தனள் யாயே- |
|
கதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத் |
|
திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார், |
5 |
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த |
|
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி, எல் பட, |
|
அகல் அங்காடி அசை நிழல் குவித்த |
|
பச்சிறாக் கவர்ந்த பசுங் கட் காக்கை |
|
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும் |
10 |
மருங்கூர்ப் பட்டினத்து அன்ன, இவள் |
|
நெருங்கு ஏர் எல்வளை ஓடுவ கண்டே. |
உரை |
|
தோழி செறிப்பு அறிவுறீஇயது.-நக்கீரர்
|
|
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-பொன் வீ |
|
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல், |
|
பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி, |
|
செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி, அவ் வாய்ப் |
5 |
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி, |
|
சாரல் ஆரம் வண்டு பட நீவி, |
|
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி |
|
அரிய போலக் காண்பேன்-விரி திரைக் |
|
கடல் பெயர்ந்தனைய ஆகி, |
10 |
புலர் பதம் கொண்டன ஏனற் குரலே? |
உரை |
|
தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.-கொற்றங் கொற்றனார்
|
|
கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை |
|
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ, |
|
தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது |
|
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர! |
5 |
வெய்யை போல முயங்குதி: முனை எழத் |
|
தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன் |
|
மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என் |
|
ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த |
|
முகை அவிழ் கோதை வாட்டிய |
10 |
பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே! |
உரை |
|
ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.-பரணர்
|
|