|
|
''நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி |
|
நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை |
|
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், |
|
மயில் ஓரன்ன சாயல், செந் தார்க் |
5 |
கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், |
|
பாவை அன்ன வனப்பினள் இவள்'' என, |
|
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி, |
|
யாய் மறப்பு அறியா மடந்தை- |
|
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே. |
உரை |
|
சேட்படுத்து, ''பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையி னான்'' என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது.-பாண்டியன் மாறன் வழுதி
|
|
இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த |
|
நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக் |
|
காடு கவின் பூத்தஆயினும், நன்றும் |
|
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல் |
5 |
நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ |
|
தாஅம் தேரலர்கொல்லோ-சேய் நாட்டு, |
|
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு |
|
வெளிறு இல் காழ வேலம் நீடிய |
|
பழங்கண் முது நெறி மறைக்கும், |
10 |
வழங்கு அருங் கானம் இறந்திசினோரே? |
உரை |
|
பருவம் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
|
|
ஒலி அவிந்து அடங்கி, யாமம் |
|
நள்ளென, |
|
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே; |
|
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை |
5 |
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத் |
|
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும், |
|
''துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய், |
|
நம்வயின் வருந்தும், நன்னுதல்'' என்பது |
|
உண்டுகொல்?-வாழி, தோழி!-தெண் கடல் |
10 |
வன் கைப் பரதவர் இட்ட செங் கோல் |
|
கொடு முடி அவ் வலை பரியப் போக்கி, |
|
கடு முரண் எறி சுறா வழங்கும் |
|
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே. |
உரை |
|
வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது;சிறைப்புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம்.-மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்
|
|
வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி, |
|
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ, |
|
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும் |
|
நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன் |
5 |
புணரின், புணருமார் எழிலே; பிரியின், |
|
மணி மிடை பொன்னின் மாமை சாய, என் |
|
அணி நலம் சிதைக்குமார் பசலை; அதனால், |
|
அசுணம் கொல்பவர் கை போல், நன்றும், |
|
இன்பமும் துன்பமும் உடைத்தே, |
10 |
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே. |
உரை |
|
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் மொழிந்தது.- மாறோக்கத்து நப்பசலையார்
|
|
வரி அணி பந்தும், வாடிய வயலையும், |
|
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், |
|
கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற, |
|
தமியே கண்ட தண்டலையும் தெறுவர, |
5 |
நோய் ஆகின்றே-மகளை!-நின் தோழி, |
|
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை |
|
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி, |
|
உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி, |
|
இலங்கு இலை வெள் வேல் விடலையை |
10 |
விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே. |
உரை |
|
நற்றாய், தோழிக்குச் சொல்லியது; மனை மருட்சியும் ஆம்.-கயமனார்
|
|
தந்தை வித்திய மென் தினை பைபயச் |
|
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ- |
|
''குளிர் படு கையள் கொடிச்சி செல்க'' என, |
|
நல்ல இனிய கூறி, மெல்லக் |
5 |
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல் |
|
சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி |
|
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர, |
|
பைதல் ஒரு நிலை காண வைகல் |
|
யாங்கு வருவதுகொல்லோ-தீம் சொல் |
10 |
செறி தோட்டு எல் வளைக் குறுமகள் |
|
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே? |
உரை |
|
புனம் மடிவு உரைத்துச் செறிப்பு அறிவுறீஇயது; சிறைப்புறமும் ஆம்.- உரோடோகத்துக் கந்தரத்தனார்
|
|
கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்; |
|
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்; |
|
கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த |
|
திதலை அல்குல் நலம் பாராட்டிய |
5 |
வருமே-தோழி!-வார் மணற் சேர்ப்பன்: |
|
இறை பட வாங்கிய முழவுமுதற் புன்னை |
|
மா அரை மறைகம் வம்மதி-பானாள், |
|
பூ விரி கானல், புணர் குறி வந்து, நம் |
|
மெல் இணர் நறும் பொழில் காணா |
10 |
அல்லல் அரும் படர் காண்கம் நாம், சிறிதே. |
உரை |
|
குறி நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.-அம்மூவனார்
|
|
செல விரைவுற்ற அரவம் போற்றி, |
|
மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழை- |
|
யாம் தற் கரையவும், நாணினள் வருவோள், |
|
வேண்டாமையின் மென்மெல வந்து, |
5 |
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி, |
|
வெறி கமழ் துறு முடி தயங்க, நல் வினைப் |
|
பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து, |
|
ஆகம் அடைதந்தோளே: அது கண்டு, |
|
ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம் |
10 |
பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம் |
|
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே. |
உரை |
|
நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்ட தலைமகன், தலைமகளை எய்தி ஆற்றானாய், நெஞ்சினைச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எயினந்தை மகன் இளங்கீரனார்
|
|
நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும், |
|
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி, |
|
''யான் செய்தன்று இவள் துயர்'' என, அன்பின் |
|
ஆழல்; வாழி!-தோழி!-''வாழைக் |
5 |
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும், |
|
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே |
|
விழுமமாக அறியுநர் இன்று'' என, |
|
கூறுவைமன்னோ, நீயே; |
|
தேறுவன்மன் யான், அவருடை நட்பே. |
உரை |
|
''வரைவு நீட ஆற்றாள்'' எனக் கவன்று தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது.-கபிலர்
|
|
விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை, |
|
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க, |
|
உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர் |
|
வாளை பிறழும் ஊரற்கு, நாளை |
5 |
மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே! |
|
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி |
|
உடன்பட்டு, ஓராத் தாயரொடு ஒழிபுடன் |
|
சொல்லலைகொல்லோ நீயே-வல்லை, |
|
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை |
10 |
வள் உயிர்த் தண்ணுமை போல, |
|
உள் யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே? |
உரை |
|
வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது; விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம்.-பரணர்
|
|