(து - ம்.) என்பது, வினைவயிற் செல்லுந் தலைமகனது குறிப்பறிந்த தலைவி தனித்து உறைதற்கஞ்சிக் கலுழ்ந்து வேறுபட்டுக்காட்ட, அதனையறிந்த தோழி தலைவியை நோக்கி, நின்கண்கள் குறிப்பாகிய மாறுபட்ட ஒரு தூதுவிடுத்தன; அத்தூதையறிந்து அவர் செல்லுதலொழிந்தனராதலின், இனி முன்பனிக்காலத்தும் அவரைப் பிரிதலரிதுகாண் எனத் தேற்றிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும் பொருள்" (தொல்-கற்- 9) என்னும் நூற்பாவின்கண் வரும் "பிறவும் வகைபடவந்த கிளவி" என்பதன்கண் அமைத்துக்கொள்க.
| நிலநீர் ஆரக் குன்றங் குழைப்ப |
| அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர்கால் யாப்பக் |
| குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர் |
| நறுங்காழ் ஆரஞ் சுற்றுவன அகைப்பப் |
5 | பெரும்புயல் பொழிந்த தொழில எழிலி |
| தெற்கேர் பிரங்கும் அற்சிரக் காலையு |
| மரிதே காதலர்ப் பிரிதல் இன்றுசெல் |
| இகுளையர்த் தரூஉம் வாடையொடு |
| மயங்கிதழ் மழைக்கண் பயந்த தூதே. |
(சொ - ள்.) இன்று செல் இகுளையர்த் தரூஉம் வாடையொடு மயங்கு இதழ் மழைக்கண் - தோழீ! இன்று பிரிந்து