பக்கம் எண் :


205


    திணை : குறிஞ்சி.

    துறை : இது, சிறைப்புறமாகத் தோழி செறிப்பறி வுறீஇயது.

    (து - ம்,) என்பது, தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவியின் இற்செறிப்பும் உள்ளுறையால் வேற்றுவரைவு நேர்ந்தமையும் தோழி அறிவுறுத்தி வரைவுடன் படுத்துவாளாய் 'மலைநாடன் யார்தரவரினும் மாலையனாகி வாராநிற்பன்; வந்தும் யாது பயன்; முயங்கப் பெறுபவனல்லன்; புலந்து போயினும் போவானாக' வென்று வெகுண்டு கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை "களனும் பொழுதும் . . . . . .அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    
திணையுண் கேழல் இரியப் புனவன் 
    
சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர் 
    
ஒண்கேழ் வயப்புலி படூஉம் நாடன் 
    
ஆர்தர வந்தனன் ஆயினும் படப்பை 
5
இன்முசுப் பெருங்கலை நன்மேயல் ஆரும் 
    
பன்மலர்க் கான்யாற்று உம்பர்க் கருங்கலை 
    
கடும்பாட்டு வருடையொடு தாவன உகளும் 
    
பெருவரை நீழல் வருகுவன் குளவியொடு 
    
கூவிளந் ததைந்த கண்ணியன் யாவதும் 
10
முயங்கல் பெறுகுவன் அல்லன் 
    
புலவி கொளீஇயர்தன் மலையினும் பெரிதே. 

    (சொ - ள்.) தினை உண் கேழல் இரிய புனவன் சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர் - தினைப்புனத்து வந்து மேயும் பன்றி பட்டொழியுமாறு அகத்தினைப்புனத்துக்குத் தலைவன் சிறிய இயந்திரமாக அமைத்து வைத்த பெரிய கல்லின் கீழால்; ஒள் கேழ் வய புலி படூஉம் நாடன் ஆர்தர வந்தனன் ஆயினும் - ஒள்ளிய நிறத்தையும் வலியையுமுடைய புலி புகுந்துபடுகின்ற மலைநாடன் யாராலே தரப்பட்டு வந்தவனாயினும்; படப்பை இன்முசுப் பெருங்கலை நல்மேயல் ஆரும் பல் மலர்க் கான்யாற்று உம்பர் - கொல்லையின்கண் இனிய முசுவின் பெரியகலை நல்ல உணவை உண்ணாநிற்கும் பலவாய மலரையுடைய கான்யாற்றின் மேலுள்ள; கருங்கலை கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும் பெருவரை நிழல் - கரையின்கண்ணே பெரிய கலை மான், கூட்டமாகிய மலையாட்டினத்துடனே தாவித் துள்ளிக் குதியாநிற்கும் பெரிய மூங்கிற்புதர் நிழலில்; குளவியொடு கூவிளம் ததைந்த கண்ணியன்