(து - ம்,) என்பது, சென்று வினைமுடித்துமீளுந் தலைமகன், உடனே தலைவியைக் காணுமாசையாலே தேரை விரைவிலே செலுத்த வேண்டுமென்னுங் குறிப்புடனே தேர்ப்பாகன் கேட்குமாறு 'கற்பினையுடைய நம் காதலி உறையுமூர் ஈண்டுள்ள காட்டகத்ததா யிராநின்ற' தென உவந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.
| வானிகுபு சொரிந்த வயங்குபெயல் கடைநாள் |
| பாணி கொண்ட பல்கால் மெல்லுறி |
| ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கிப் |
| பறிப்புறத்து இட்ட பால்நொடை இடையன் |
5 | நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்பத் |
| தண்டுகால் வைத்த ஒடுங்குநிலை மடிவிளி |
| சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும் |
| புறவி னதுவே பொய்யா யாணர் |
| அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் |
10 | முல்லை சான்ற கற்பின் |
| மெல்லியல் குறுமகள் உறைவின் ஊரே. |
(சொ - ள்.) அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் - இராப்பொழுதாயிருப்பினும் வந்த விருந்தைக் கண்டு மகிழா நிற்கும் யான் கூறிய சொற்பிழையாதபடி இல்லிலிருந்து நல்லறஞ் செய்யும் கற்பினையும்; மெல் இயல் குறுமகள் உறைவின் பொய்யா யாணர் ஊர் - மென்மையாகிய சாயலையும் உடைய இளைய மாறாத நங் காதலி உறைகின்ற பொய்யாத புது வருவாயினையுடைய ஊரானது; வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடைநாள் - மழை காலிறங்கிப் பொழிந்த விளங்கிய பெயலின் இறுதி நாளிலே; பாணிகொண்ட பல்கால் மெல் உறி ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கி - கையிற் கொண்ட பலவாகிய காலிட்டுப் பின்னிய மெல்லிய உறியுடனே தீக்கடைகோல் முதலாய கருவிகளை இட்டு வைத்த தோற்பையை ஒருசேரச் சுருக்கிக்கட்டி; பறிபுறத்து இட்ட பால் நொடை இடையன் - பனையோலைப் பாயோடு முதுகிற் கட்டியிட்ட பால் விலைகூறி ஏகும் இடையன்; நுண் பல் துவலை ஒரு