பக்கம் எண் :


318


மீனைத்தின்ற செருக்கோடு நாரை வற்றிய குளத்துச் சிறிது சிறிது மலர்ந்து வாட்ட முறுகின்ற நெய்தல் மலரை மிதித்துக் கெடுத்தல் போலப் பொருள்வயிற் கொண்டவுள்ளத்தொடு நீ நெடுநாளைக்கொரோவொரு கால் நின்னைப் பெற்று ஏனைக்காலத்து வாடியிருக்குந் தலைவியை முற்றும் பிரிந்து இறந்துபாடுறுவிக்கின்றனை என உவமையொடு பொருளை ஒற்றுமையாக்குக. வாழாளாத லென்றது துன்பத்துப் புலம்பல். ஏனை மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல்.

    (பெரு - ரை.) ஒருநாள் வந்து ஒருபகல் பழகும் ஏதிலராகிய உமணர் பிரிந்துபோதலும் அவரொடு பழகுவோர்க்குப் பெரிதும் இன்னாததாகும். நின்னிற்பிரியேன் என உறுதி கூறி உயிருறக் கேண்மை பூண்ட நீ பிரியின் என்னாம்? என்றிடித்துக் கூறியபடியாம். "மன்ற" என்றும் பாடம்.

(183)
    திணை : பாலை.

     துறை : இது, மனை மருட்சி.

    (து - ம்.) என்பது, தலைமகன் தலைமகளைக் கொண்டுதலைக்கழிதலும் அதனைச் செவிலியாலறிந்த ஈன்ற தாய் புலம்புவாளாக, அங்ஙனம் புலம்புதல் கண்ட அயல்மனைமாதர் போந்து தேற்றி "அஃது அறத்தாறாதல் கண்டாய்! இனி வருந்தாதேகொ" ளென்றார்க்கு "அறத்தாறாயினும் பிரிவை எவ்வண்ணந் தாங்கமுடியும்? என்மகள் ஆடிய இடங்காணின் என்னுள்ளமும் வேகின்ற தன்றோ?" என எதிரழிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, ""தன்னும் அவனும் .......................... போகிய திறத்து நற்றாய் புலம்பலும், ஆகிய கிளவி யவ்வழி யுரிய"" (தொல். அகத். 36) என்னும் விதிகொள்க.

    
ஒருமகள் உடையேன் மன்னே அவளுஞ் 
    
செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு 
    
பெருமலை அருஞ்சுரம் நெருநற் சென்றனள் 
    
இனியே, தாங்குநின் அவலம் என்றிர் அதுமற்று 
5
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடை யீரே 
    
உள்ளின் உள்ளம் வேமே உண்கண் 
    
மணிவாழ் பாவை நடைகற் றன்னஎன் 
    
அணியியற் குறுமகள் ஆடிய 
    
மணியேர் நொச்சியுந் தெற்றியுங் கண்டே. 

    (சொ - ள்.) அறிவு உடையீரே ஒரு மகள் உடையேன் - அறிவுடைய அயலிலாட்டியரே ! நுங்களைப் போல பல புதல்வியரைப் பெற்றேனில்லை, யான் ஒரோவொரு புதல்வியையே பெற்றுடையேன்;