பக்கம் எண் :


403


களவுமுட்டுப்பாட்டினால் இனி வரைந்தெய்துவா னென்றதாயிற்று; மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) "தெளிமே" என்றும் பாடம்.

(233)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, செவிலியால் அறத்தொடு நிற்கப்பட்ட நற்றாய் தந்தை முதலியோர்க்கு அறத்தொடு நின்றது.

     (து - ம்.) அஃதாவது, தலைவி தலைவனுக்குக் கற்புக்கடம் பூண்ட செய்தியைத் தோழி அறத்தொடு நிற்றலா லுணர்ந்த செவிலி நாற்றாய்க்கு அறத்தொடு நின்றுணர்த்தினளாக, அவ்வழித் தலைவன் சான்றோரை முன்னிட்டு அருங் கலங்களோடு வரைவு வேண்டிவிட, முன்விளைவறியாத தந்தையும் தமையன்மாரும் வரைவு மறுத்தாராக; அது கண்ட நற்றாய் தலைவி கற்புக்கடம் பூண்டமையை அவர் குறிப்பாலுணரும்படி அறத்தொடு நின்றது என்றவாறு.

     (இ - ம்.) இதனை, "தாய்க்கும்வரையார் உணர்வுடம் படினே" (தொல். கள. 25) எனவரும் மாட்டேற்று விதியான் அமைத்துக் கொள்க.

    
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது 
    
வான்தோய்வு அன்ன குடிமையும் நோக்கித் 
    
திருமணி வரன்றும் குன்றம் கொண்டிவள் 
    
வருமுலை ஆகம் வழங்கினோ நன்றே 
5
அஃதான்று, 
    
அடைபொருள் கருதுவிர் ஆயின் குடையொடு 
    
கழுமலம் தந்த நற்றேர்ச் செம்பியன் 
    
பங்குனி விழவின் உறந்தையொடு 
    
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே. 

     (சொ - ள்.)நமரங்காள்!-; சான்றோர் வருந்திய வருத்தமும் - நம்பால் மகட்பேசும் பொருட்டு அருங்கலம் முதலியன சுமந்து நம்மில்லிற்கு வந்துள்ள இப் பெரியோருடைய வழிநடை வருத்தத்தையும்; நுமது வான்தோய்வு அன்ன குடிமையும் நோக்கி - நுங்களுடைய வானைத் தீண்டுமளவு உயர்ந்தாற் போன்றுயர்ந்து திகழும் குலச்சிறப்பினையும் நினைந்துபார்த்து; இவள் ஆகம் வருமுலை - நம்மகளின் மார்பின்கண் கணந்தொறும் வளராநின்ற முலைக்கு விலையாக; திருமணி வரன்றும் குன்றம் கொண்டு - இச் சான்றோராற் குறிப்பிடப்படுகின்ற அருவிநீர் அழகிய மணிகளை வரன்றி வீழ்தற்கிடனான தலைவனது குன்றத்தையே